செய்தி: குப்பை மேட்டை அகற்றித் தந்தால், கே.வி.ஏ.டி. அறக்கட்டளை சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் பூங்கா அமைத்து தரப்படும்! நகர்மன்றத் தலைவர், அதிகாரிகளிடம் 04ஆவது வார்டு உறுப்பினர் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:குப்பை மேட்டை அகற்றித் தந... posted byrahmath (chennai)[31 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12658
சகோதரர் அபுதாகிர் காயல்.காம், ஏதோ இப்போதுள்ள நமது நகராட்சியின் தலைவிக்கு சாதகமான செய்திகளை மட்டுமே போடுவதுபோல் குற்றம் சாட்டி உள்ளது வேடிக்கையாக உள்ளது.
இது அவருடைய குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது.
S K கிதுறு பாத்திமா அவர்கள் அந்த குப்பைமேட்டுக்கு , அவர்களுடைய பதவி காலத்தில் வந்ததாகவும், அதை காயல் செய்தியில் போடவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.
S K கிதுறு பாத்திமா அவர்களுக்கும் காயல்.காம் உக்கும் எந்த ஒரு தனிப்பட்ட பகையும் இருப்பதாக தெரியவில்லை. இதை எல்லாம் ஒரு பெரிய குறையாக சொல்வது அழகில்லை.
செய்தி: பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு ஐக்கியப் பேரவை தலைவர் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் அழைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byrahmath (chennai)[25 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12195
சகோதரி ஆபிதா, பெருந்தன்மையோடு நம் ஊர் பெரியவர்களை நேரில் போய் சந்தித்து ,தனது பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஐக்கிய பேரவையின் மரியாதைக்குரிய தலைவர் அவர்கள் பதவி ஏற்பு விழாவுக்கு வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
இன்னும் பெரியவர்களுக்கு பெருந்தன்மையான மனசு வராததற்கு என்ன காரணமோ? வயசாகிவிட்டால் சிறுபிள்ளை மாதிரி என்பார்கள். அல்லாஹ் நம் யாவருக்கும் நல்ல ஹிதாயத்தை அளிப்பானாக.
செய்தி: புதிய நகர்மன்ற தலைவர் - உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் திட்டமிடல் கூட்டம்! தலைவர், 14 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ... posted byrahmath (chennai)[24 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12086
அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரி ஆபிதா அவர்களே, நீங்கள் இப்படி ஒரு get together ஏற்பாடு செய்து, நம் முன்னாள் தலைவிகளையும் இன்னும் ஊரில் உள்ள மற்றவர்களையும் அழைத்தது மிகவும் சந்தோசபடகூடிய விஷயம்.
ஆனால் நீங்களாவது பெருந்தன்மையோடு இந்த விழாவுக்கு ஐக்கிய பேரவைக்கு அழைப்பு கொடுத்திருக்கலாமே. ஒரு வேலை உங்கள் அழைப்பை ஏற்று அவர்கள் வந்திருந்தால் நம் சகோதரர்களுக்குள் இருந்த கசப்பு நீங்கி இருக்கலாம்.
Re:ஐக்கியப் பேரவை சார்பில் த... posted byrahmath (chennai)[23 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 12000
அஸ்ஸலாமு அலைக்கும். ஐக்கிய பேரவையின் சேவைகளை பார்க்கும்போது மனசுக்கு சந்தோசமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஐக்கிய பேரவை அப்பாமார்கள், பேத்தி ஆபிதாவை வாழ்த்த மனசு வராமல் இவ்வளவு வைராக்கியமாக இருப்பதை பார்க்கும்போது மனசு ரொம்ப வேதனை அடைகிறது.
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா வெற்றி பெற்று பதவி ஏற்பு விழாவில் எதிர் கட்சி தலைவர்கள் முன் வரிசையில் அமர்ந்து மம்தா அவர்களை வாழ்த்தியது உங்களுக்கு தெரிந்திருக்க கூடும். மாற்றுமத சகோதரர்களுக்கு இருக்கும் பெரிய மனசு, ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறையை பின்பற்றக்கூடிய நம் சகோதரர்களுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது?
தயவுசெய்து வெற்றிபெற்ற நம் புது தலைவியை வாழ்த்துங்கள். உங்கள் மேல் உள்ள மதிப்பு மக்கள் மத்தியில் கூடும். உங்களை புகழ்ந்து பாராட்டி செய்தியும் புகைப்படங்களும் நமது காயல்பட்னம்.காம் வலைத்தளத்திலும் வரும்.
Moderator: Comment edited!
ஐக்கிய பேரவையின் பெருந்தன்மை posted byrahmath (chennai)[22 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 11852
அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைத்து காயலர்களும் உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெற்றி பெற்ற சகோதரி ஆபிதாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நமது ஊரின் ஒற்றுமைக்காகவும் (!) நன்மைக்காகவும் பாடுபடும் நமது மரியாதைக்குரிய ஐக்கிய பேரவை சார்பாக இதுவரை சகோதரி ஆபிதாவை வாழ்த்த கூட மனம் வரவில்லை என்றால், இதிலிருந்து நம் ஐக்கிய பேரவையின் பெருந்தன்மையான மனநிலையை நாம் புரிந்துகொள்வோம். அல்லாஹு அக்பர்.
vaalthukal posted byrahmath (chennai)[21 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 11699
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த தேர்தல் முடிவிலிருந்து நாம் விளங்கி கொண்டது என்னவென்றால்,
இறைவன் என்றுமே நீதிக்கும் நேர்மைக்கும் மட்டுமே துணை நிற்பான். எங்கள் பகுதியான மத்திய காயலில் சகோதரி ஆபிதாவை பற்றி என்னவெல்லாமோ வதந்திகளை பரப்பினார்கள். ஆனால் வல்ல நாயன் நீதிக்கு வெற்றியை தந்துள்ளான்.
இருப்பினும் சகோதரி ஆபிதா அவர்களே, தயவு செய்து தேர்தல் நேரத்தில் நடந்த எல்லா கசப்பான அனுபவங்களை எல்லாம் அல்லாஹுக்காக மறந்துவிட்டு, பொறுமையோடும், சகோதர பாசத்தோடும் உங்களுக்கு வாக்களித்தவர்கள், வாகளிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் உங்கள் சேவையை தொடருங்கள்.
அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் வெற்றியை தருவான். அவனுடைய கூலி மகத்தானதாக இருக்கும்.
ஐக்கிய பேரவை இனியாவாவது ஊர் ஒற்றுமை என்று நாடகம் ஆடி உங்கள் மரியாதையை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross