காயல்பட்டினம் நகரில சீரான மின் வினியோகத்திற்காக, அதிகளவில் மின் மாற்றிகளை (ட்ரான்ஸ்ஃபார்மர்) அமைக்குமாறு, தமிழக மின்சாரத் துறை அமைச்சருக்கு, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் அதன் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் கோரிக்கை வைத்துள்ளார்.
காயல்பட்டினத்தில் மின் நுகர்வு அதிகளவில் உள்ளதாகவும், குறைந்த மின் திறன் உள்ள மின் மாற்றிகள் பழுதடைந்தும், வெடித்தும் விபத்து ஏற்படுவதாகவும், அவற்றின் காரணமாக அதிகளவில் நகரில் மின் தடை ஏற்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், நகரில் அதிகளவில் மின் மாற்றிகளை அமைத்திடவும், 150 கிலோ வாட்ஸ், 250 கிலோ வாட்ஸ் அளவிலான மின் மாற்றிகளை 500 கிலோ வாட்ஸ் மின் மாற்றிகளாக மாற்றம் செய்து தரவும் கோரியுள்ளார். |