காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் கைப்பந்து விளையாட்டு வீரரும், தப்லீக் ஜமாஅத்தின் பொறுப்பாளரும், மாணிக்க வணிகருமான முஹம்மத் லெப்பை, நேற்று (மே 04 ஞாயிற்றுக்கிழமை) 23.30 மணியளவில், இலங்கை கல்முனை - நிண்டவூரில் காலமானார். அவருக்கு வயது 43.
அன்னார், முஹம்மத் முஹ்யித்தீன் - செய்யித் மர்யம் தம்பதியின் மகனும், அஹ்மத் ரஜீனா என்பவரின் கணவருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இலங்கை - கல்முனையில் ரூஹுல்லாஹ் ஆசிரியர் இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின், கல்முனை மஸ்ஜிதுல் ஹக் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
நல்லடக்கத்தில் பங்கேற்பதற்காக, இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து, ஹாஜி ஏ.டி.முஹம்மத் அப்துல் காதிர் தலைமையில் காயலர்கள் வாகனத்தில் கல்முனை புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
நல்லடக்க ஏற்பாடுகளை, மறைந்த முஹம்மத் லெப்பை அவர்களின் நண்பர் ஆசிரியர் ரூஹுல்லாஹ் தலைமையில், கல்முனை ஜமாஅத்தார் முழுப்பொறுப்பேற்று செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
2. ஆழ்ந்த இரங்கல்.. posted byL .A .K .புஹாரி (Hong Kong)[05 May 2014] IP: 101.*.*.* Hong Kong | Comment Reference Number: 34711
இன்னா லில்லாஹி வ இன்னா லிலிஹி ராஜிவூன்...
எங்களுக்கு 1987-89 ஆண்டுகளில் USCஇல் volleyball விளையாட்டு கற்றுக்கொடுத்த பயிற்சி ஆசிரியர் முஹம்மத் லெப்பை அவர்கள் இலங்கை கல்முனை நிண்டவூரில் வைத்து நேற்று நள்ளிரவில் காலாமானார்கள் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தோம்.
கண்ணியத்திற்குரிய அன்னார் தோற்றத்தில் ஆஜானுபாகுவாக இருந்தாலும் உள்ளத்தில் மிகுந்த கனிவும் அழகிய பண்பும் கொண்டவர்..பயிற்சி கற்று கொடுக்கும் போதெல்லாம் கோபப்படாமல் அன்புடன் வழி நடத்துவார். சத்திய இஸ்லாம் மார்கத்தின் தீவிர பற்றுடையவர்.இறை சிந்தனையுடன் வாழ்ந்து இறைவனிடம் சேர்ந்த அன்னாரது மறுமை வாழ்வு ஜன்னத்துல் பிர்தௌஸ் இல் வீற்றிருக்க எல்லாம் வல்ல ஏக நாயன் அல்லாஹ்வை இரு கரமேந்தி பிரார்த்திக்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!
அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....
5. Re:...மறக்க முடியுமா..முஹம்மது லெப்பை! posted bymackie noohuthambi (chennai)[05 May 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34715
எனது நினைவில் வாழும் முஹம்மது லெப்பை அவர்களின் மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இன்று காலை என்னை வந்தடைந்தபோது அடி வயிற்றில் அமிலம் சுரந்தது.
மார்க்க விஷயங்களில் பேணுதல் உள்ளவர். தப்லீக் தாவத் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். தொழில் மாணிக்கம் என்பதுபோல் அவர் உள்ளமும் மாணிக்கம். கித்மத்தில் முன்னணியில் நிற்பவர். அவர் ஜமாத்தில் வழி நடத்துபவராக சென்றால் அவருடன் இணைந்து செல்ல மனம் நாடும்.
கடந்த ஹஜ்ஜுப் பெருநாளில் கொழும்பில் காலை உணவை அவரே முன்னின்று சமைத்தார். அதை நான் உள்பட பலரும் ரசித்து சுவைத்து சாப்பிட்டு அவர் ஹக்கில் து ஆ செய்தோம். இன்றும் அந்த ருசியும் தரமும் நாவில் எச்சில் ஊற வைக்கிறது.இனி வரும் பெருநாள்களில் இன்ஷா அல்லாஹ் நீங்கள்தான் சமைத்து தர வேண்டும் என்று அவரிடம் நேரடியாகவே நான் சொல்லி சிரித்து பேசிக் கொண்டிருந்தேன்.
மர்ஹூம் அவர்கள் முஸ்லிம்கள் நிறைந்த புகழ்பெற்ற நிந்தவூரிலே வபாத்தான சேதி மன நிறைவு தருகிறது. அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து, நல அமல்களை கபூல் செய்து மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக.அவரது மண்ணறையை சுவர்க்க பூங்காவாக்கி வைப்பானாக. அவர் இல்லாளுக்கும் தந்தைக்கும் உறவினர்களுக்க்ம் பொறுமையை கொடுத்தருள்வானாக.ஆமீன்.
6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். posted byyahya mohiadeen (dubai)[05 May 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34718
"எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.
8. மிக பெரிய அதிர்ச்சியாகவும் துயரமாகவும் உள்ளது (இன்னாலில்லாஹி லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) posted byM.A.C.AHAMED THAHIR (NEW DELHI)[05 May 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 34721
(இன்னாலில்லாஹி லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்)
இவர்கள் எனக்கு சின்ன கன்மாவின் மகன் (மாமா) ஆவார்கள். (நான் இவர்களை மம்ம்மமா லெப்பை மாமா என்று தான் அழைப்பேன்)
இவர்கள் Volley Ball (USC) விளையாட்டில் மிகவும் திறமை மிக்கவர். மேலும் எல்லா மக்களிடமும் அன்பாகவும், குணமாகவும், அழகிய முறையில் பண்புடன் பேச கூடியவர். அடிக்கடி இறை வசனத்தின் ஏதாவது ஒரு அத்தியாத்தை ஓதி கொண்டே இருப்பார். எங்களை போன்ற ஹாபிள்மார்களை கண்டால் விட மாட்டார்கள். உடனே எங்களை ஓரம் கட்டி உட்கார வைத்து குர்ஆனை திறந்து ஓத கேட்பார் அல்லது அவர் ஓதி எங்களை கேட்க வைத்து தப்பு கண்டு பிடிக்க சொல்வார். மாஷா அல்லாஹ். மிக அழஹிய முறைகள் ஓதி காட்டுவார். மேலும் தாவத் தப்லீக் பணிகளில் மிகவும் சிறப்பாக மற்றவளுக்கு மார்க்க விவரங்களை மிகவும் ருசியாக ரசிக்கும்படி எத்தி வைப்பார்கள்.
இவ்வாறு இவரின் தனி சிறப்புகளை சொல்லி கொண்டே போகலாம். மாஷா அல்லாஹ்.
இன்று அதிகாலை தான் எனக்கு என் குடும்பத்தார் வழியாக இவர்களின் மரண செய்தி கேட்டேன். நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். என் மனது மிகவும் கணத்து விட்டது கேட்டவுடன். இருந்தாலும் அல்லாஹ்வுடைய விதியென்று ஒன்று உண்டல்லவா..! அதை நாம் கண்டிப்பாக பொருந்தி தானே ஆக வேண்டும். இதுவும் ஈமானின் ஒரு அடிப்படை விதி தானே..!!
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரின் பிழைகளை பொறுத்து , ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக,
அல்லாஹுதஆலா அவரின் உறவினர்களை தன் பொறுப்பில் எடுத்து '' ஸபுருன் ஜமீல்'' என்ற அழகிய பொறுமையை அவர்களின் இதயத்தில் பொருத்துவானாக.... ஆமீன்.. யா ரப்பல் ஆலமீன்.
புது டெல்லியிலிருந்து....
M .A .C. அஹ்மது தாஹிர்
(Cell No. +91 8130237131).
11. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[05 May 2014] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34725
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இந்த செய்தியை கண்டதும் கைகள் நடுங்குகின்றன. காரணம் என் பாலிய கால நண்பன். அவன் இருக்கும் இடம் என்றும் கலகலப்பாக இருக்கும். எப்போதும் சுறு சுறுப்புடன் இருப்பான். பாடி பில்டிங், வாலிபால்,ஈட்டி எறிதல், போன்ற பல விளையாட்டுக்களில் கில்லாடி.
அதன் பின்பு தப்லீக் ஜாமத்தில் ஈடுபாடு கொண்டதும், அப்படியே மொத்தமாக மாறிவிட்டான். அமைதி அமைதி அமைதிதான்.
நான் ஊர் வந்த சமயத்தில், அதிகாலை நடை பயிற்சியில் ஒன்றாக சில நாட்கள் நடப்போம். பல விஷயங்கள் மனம் திறந்து பேசினான்.
கிருபையுள்ள வல்ல ரஹ்மான், இவன் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து, கப்ரை வெளிச்சமாக ஆக்கி, சுவனத்து தென்றலை வீசச்செய்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.
குடும்பத்தார், நண்பர்கள் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை தருவானாக.
அட்மின்:- இவனின் வயது 47 இருக்காது. என்னை விட 1 அல்லது 2 வயது கம்மி தான். ஆக அவன் வயது 43 இருக்கும்.
15. Re:... posted byMauroof (Dubai)[05 May 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34733
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
20. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். posted byceylon fancy kazhi (Thiru valla , kerala)[05 May 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34742
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூ ம் அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.
23. Re:... posted byMAC.Mujahith (Mumbai)[05 May 2014] IP: 14.*.*.* India | Comment Reference Number: 34748
(இன்னாலில்லாஹி லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்)
இவர்கள் எனக்கு (சின்ன கன்மாவின் மகன்) மாமா ஆவார்கள்
இன்று அதிகாலை தான் எனக்கு என் குடும்பத்தார் வழியாக இவர்களின் மரண செய்தி கேட்டேன். நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு அழுகையை தவிர வேற வார்த்தை வரமாட்டேங்குது...''
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரின் பிழைகளை பொறுத்து , ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக,
26. Re:... posted byA.M.Seyed Ahmed (Jeddah)[05 May 2014] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34753
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்.
போட்டோவை பார்த்து அதிர்ந்து விட்டேன் என்னுடைய வகுப்பறை நண்பர், அவருடன் USC இல் விளையாடிய நாட்கள்
28 ஆண்டுகள் ஆகியும் நினையில் இருக்கிறது பழகுவதற்கு இனிமையானவர், பண்பானவர்.
வல்ல நாயன் ,மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்.
27. Re:... posted byசாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்)[05 May 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 34755
என் பள்ளி பருவத்து நண்பன்.
நாங்கள் 08 ஆம் வகுப்பு படிக்கும்போது நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் நடந்த 10 நாள் தேசிய மாணவர் படை முகாமில் கலந்து கொண்டோம்.
அதில் துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. மம்மா லெப்பை தனக்கு கொடுக்கப்பட்ட 05 சுற்றுக்களையும் குறி தவறாமல் சுட்டுத்தள்ளினார். இதனால் அவருக்கு மேலதிக ஊக்க சுற்றுக்கள் கொடுக்கப்பட்டன.
ஆஜானுபாகுவான தோற்றம். நல்ல திறமை சாலி. அல்லாஹ் மர்ஹூமை பொருந்திக்கொள்வானாக !!
29. பேரிழப்பு... posted byPalayam MAC (Kayalpatnam)[05 May 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 34757
எமது ஐக்கிய விளையாட்டு சங்க வாலிபால் (கைப்பந்து) அணியின் ஆற்றல் மிக்க அணித்தலைவராக பல காலம் திகழ்ந்துள்ள நண்பர் மம்மாலெப்பையுடன் இணைந்து விளையாடிய பொற்காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
அதற்கு முன்பாக, எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பில் பல ஊர்களில் கைப்பந்து அணிக்குத் தலைமையேற்று விளையாடியவர்.
பொதுவாக கிரிக்கெட், கால்பந்து போட்டிகளில்தான் வீரர்களுக்கு ரசிகர்கள் இருப்பர் என்ற எண்ணப் போக்கை மாற்றிய இவரது உற்சாகமான கைப்பந்து ஆட்டத்தால் கவரப்பட்டு, அவர் சென்று விளையாடும் இடங்களிலெல்லாம் ரசிகர்கள் மொய்ப்பது வழமை.
இத்தனை சிறிய வயதில், நம் யாவரையும் மீளாத் துயரில் விட்டுச் சென்றுவிட்டார்.
மர்ஹூம் அவர்களின் பாவப் பிழைகளை வல்ல அல்லாஹ் பொறுத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கியருளவும், அன்னாரின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமை அமையவும் நான் மனதார துஆ செய்கிறேன்.
30. Re:... அஸ்ஸலாமு அலைக்கும். posted byS.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.)[05 May 2014] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34758
"அஸ்ஸலாமு அலைக்கும்."
இன்னலிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜ்ஹீவூன்!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன். சஹோதரர் ஊரில் கைபந்து விளையாட்டு எங்கு நடந்தாலும் முன்னில்லை வஹிப்பர் என்பது மறக்க முடியாத உண்மை.
அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!
அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....
ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
31. ஒழுக்கமிக்க விளையாட்டு வீரர்... posted byS.K.Salih (Kayalpatnam)[05 May 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 34759
பொதுவாக விளையாட்டுத் துறையில் ஒருவர் புகழ்பெற்றுவிட்டால், அவரிடமிருந்து மார்க்க ஒழுக்கங்கள், நற்குணங்கள், மனிதாபிமானப் பண்புகள் கொஞ்சங்கொஞ்சமாக விடைபெறும் இக்காலகட்டத்திலும், கைப்பந்து விளையாட்டில் தனக்கென தனி முத்திரையையும், ரசிகர் பட்டாளத்தையும் கொண்டிருந்த சகோதரர் முஹம்மத் லெப்பை என்ற மம்மாலெப்பை காக்கா அவர்கள், ஒழுக்கத்தின் உறைவிடமாக வாழ்ந்து மறைந்துள்ளார்கள்.
அன்னாரோடு, எங்கள் ஈக்கியப்பா தைக்கா மைதானத்தில் அதிக நாட்கள் கைப்பந்து விளையாடிய அனுபவமும், அவர் நடுவராகப் பணியாற்றிய பல போட்டிகளைக் கண்டு களித்த அனுபவமும் எனக்குண்டு. (அவர் விளையாடுவார்; நான் களத்தில் இருப்பேன். அவ்வளவுதான்!)
சாதாரணமாக தனது உள்ளங்கையால் சர்வீஸ் தட்டுவது போலிருக்கும். பந்து நம்மைக் கடக்கும்போது - ‘விர்’ரென காற்றைக் கிழித்துப் பறப்பதை வைத்துதான், பந்து நம் முகத்தில் படாததை எண்ணி பயத்துடன் கூடிய மகிழ்ச்சி ஏற்படும். அத்தனை அற்புதமான சர்வீஸ். முக்கி, முனங்கி விளையாடும் வீரர்களுக்கிடையில், இவர் களமிறங்கி விட்டாலோ எதிரணி தனது தோல்வியை துவக்கத்திலேயே மனதளவில் ஒப்புக்கொள்ளும்.
மார்க்கத் துறையிலும் மம்மாலெப்பை காக்கா அவர்களுடன் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவம் எனக்குண்டு.
நல்ல ஆத்மாக்களெல்லாம் நம்மை விட்டும் வேக வேகமாக விடைபெற்றுச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம். அல்லாஹ் நம் யாவரையும் காப்பாற்றுவானாக.
மர்ஹூம் அவர்கள் தங்கள் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளை வல்ல அல்லாஹ் தன் பெருங்கிருபையால் பொறுத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கிடவும்,
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையைத் தந்தருளவும் நான் மனதார துஆ செய்கிறேன்.
அனைவருக்கும் எனதன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
41. சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வல்ல இறைவன் அருள்வானாக... ஆமின் posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[05 May 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34778
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண். மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து, நல்அமல்களை ஏற்று, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்.
அவரின் பிரிவால் வாடும் அவரின் வாப்பா மற்றும் குடும்பத்தாருக்கு சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வல்ல இறைவன் அருள்வானாக... ஆமின்.
46. Re:...அதிர்ச்சி செய்தி posted bySalai Sheikh Saleem (Dubai)[05 May 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34784
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
மம்மா லெப்பையின் வஃபாத் செய்தி கேள்விப்பட்டு பேரதிர்ச்சி அடைந்தோம்.
ஆஜானுபான தோற்றம் குழந்தை உள்ளம் நகைச்சுவை உணர்வு நல்லெண்ணங்கள் மார்க்க சிந்தனைகள் குடும்ப பொறுப்பு பாசம் என்று எல்லாமும் ஒருங்கே அமையப்பட்ட நல்லவனை நாம் இழந்திருக்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமின் பிழைகளை பொருத்து அவரின் கப்ரை விசாலமாக்கி ஒளிமயமாக்கி மறுமையில் நல்லோர் கூட்டத்தில் சுவனபதியில் தரித்திருக்க அருள் புரிவானாக ஆமீன்.
மர்ஹூமை இழந்து தவிக்கும் குடும்பத்தார்கள் (குறிப்பாக மர்ஹூம் அவர்களுடன் வசித்து வந்த மனைவி) உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக !!! ஆமீன்.
47. இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன் posted byV.M.T.Mohamed Hasan (Hong Kong)[05 May 2014] IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 34786
أللهـــــم اغـفـــــر له وارحمـــه
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை ஏற்று ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனப் பதியில் சேர்த்து வைப்பானாக.
மர்ஹூமவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்ப சொந்தங்கள் அனைவருக்கும் சப்ருன் ஜமீல் என்ற நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.
50. ..இன்னாலில்லாஹி posted byNIZAR (KAYALPATNAM)[06 May 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 34791
காயல்பட்டினத்தை சேர்ந்த மாணிக்க வியாபாரி முஹம்மது லெப்பை என்ற என் இனிய நண்பர் நேற்று கொழும்பு இலங்கையில் உள்ள கல்முனை என்ற ஊரில் வபாத்தாகிவிட்டார்கள். இவரின் வபாத் செய்தி என் இதயத்தை கனமாக்கியது.
அவரோடு ஒன்றாக இருந்த காலங்கள் என் கண்முன்னே நிழலாடுகிறது. எத்தனை இனிமையான நண்பரை இழந்துவிட்டோமே என இதயம் வலித்து கொண்டே இருக்கிறது.
இவர் என் கல்லூரி நண்பர், வாலிப வயதிலேயே தனிமனித ஒழுக்கமும், இறை அச்சமும் கொண்டவர். கல்லூரியில் மாற்று மத சகோதரர்களும் இவரிடம் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். சிறிய நேரம் கிடைத்தாலும் தூய இஸ்லாத்தை மற்ற சகோதரர்களுக்கு எத்தி வைக்கும் பணியை செய்வார்.
ஆன்மிகத்தில் மட்டுமன்றி விளையாட்டிலும் வீரனாக திகழ்ந்த இந்த நண்பனின் இழப்பு தாங்க முடியாத ஒன்றாகும்.
இவரை இழந்து வாடி நிற்கும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.
இறைப்பணியும், இறை அச்சம் என்ற தக்வாவோடு வாழ்ந்த என் நண்பனுக்கு இறைவன் சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக, மறுமையில் மேலான பதவியை அளிப்பானாக என இறையிடம் இறைஞ்சுவோமாக,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross