காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் இம்மாதம் 08ஆம் நாள் வியாழக்கிழமை (இன்று) காலையில் - உளத்தூய்மையை மேம்படுத்தும் தஸ்கிய்யா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பள்ளி தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் நூஹ் அல்தாஃபீ நெறிப்படுத்தினார்.
இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவீ முபாரக் மதனீ சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, தஸ்கிய்யா நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
உளத்தூய்மை, வணக்க வழிபாடுகளில் ஓர்மை, கருத்து வேறுபாடுகளுள்ள அம்சங்களில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள், மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து கண்ணியத்துடன் அதை விமர்சித்தல் உட்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.
இன்று 11.00 மணி முதல் 13.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் இதற்கு முன் நடைபெற்ற தர்பிய்யா / தஸ்கிய்யா நிகழ்ச்சி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |