காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 87ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ரஜப் 07ஆம் நாளன்று (மே 07) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஏ.எல்.முஹம்மத் அலீ பாக்கவீ வழங்கினார்.
ஹஜ், உம்ரா, ஜியாரத் ஆகியவற்றின் சட்டங்கள் மற்றும் மகத்துவங்கள் குறித்து அவரது உரையில் செய்திகள் இடம்பெற்றன.
ரஜப் 08ஆம் நாளன்று (மே 08) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ஜாவியா அரபிக்கல்லூரி, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் பேராசிரியரும், மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1434ஆம் ஆண்டு (கடந்தாண்டு) ஏழாம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|