காயல்பட்டினம் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றத்தின் 13ஆவது கலந்துரையாடல் கூட்டம், இம்மாதம் 10ஆம் நாள் சனிக்கிழமை 17.00 மணிக்கு, காயல்பட்டினம் ரிஸ்வான் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, அதன் அமைப்பாளர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம், புதுப்பள்ளி வளாகம், ரிஸ்வான் சங்கம் (அரசு நூலகம் அருகில்) இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்றம் சார்பில் 13ஆவது மாத சிறப்புக் கலந்துரையாடல் இன்ஷா அல்லாஹ் வரும் 10-05-2014 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.
நமது அமைப்பின் கௌரவ ஆலோசகர் அரசு நூலகர் அ.முஜிப் அவர்களும், கவிஞர் சேய்க் அவர்களும் கைப்பேசி மூலம் நமது இலக்கிய பிரியர்களுக்கு தகவல் அனுப்பிவைப்பார்கள். அதை ஏற்று நீங்கள் உங்கள் அருகாமையிலுள்ள நண்பர்களுடன் வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இதைப் படிக்கும் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று இந்த பொன்மாலை பொழுதில் நீங்கள் கேட்ட - படித்த செய்திகளைப் பதிவு செய்யலாம். தலைப்பு ஏதுமில்லை. நீங்கள் நினைத்தவற்றை பேசி பழகலாம்.
கூச்சம் தெளிய அரிய வாய்ப்பை ஏற்படுத்தும் இந்த மாமன்றத்தில் கலந்து கொள்வதால், அறிவு சார்ந்த கல்வியாளர்களின் புதிய நட்பும் கிடைக்கும்.
மறக்காமல் மே 10 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் ரிஸ்வான் சங்கம் நோக்கி திரளாக வரும்படி அன்புடன் அழைக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |