வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில், காயல் ப்ரீமியர் லீக் க்ரிக்கெட் போட்டிகள் இன்று (மே 02) துவங்கின. துவக்கப்போட்டியில், காயல் யுனைட்டெட், ஃபை ஸ்கை பாய்ஸ், கே.டி.என்., வாவு வாரியர்ஸ் அணிகள் வென்றுள்ளன.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2014 : இரண்டாம், மூன்றாம் நாள் போட்டி முடிவுகள்!
இரண்டாம் நாள் போட்டிகள்:
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 5-ம் ஆண்டு காயல் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2-ம் தேதி முதல் காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் இரண்டாம் நாள் (03/05) போட்டிகள் மழையின் காரணமாக நிறுத்தப்பட்டு, மறுதினம் (04/05) நடத்தப்பட்டது.
இதன் முதல் போட்டியில் KTN அணியை எதிர்த்து கேளரி பேர்ட்ஸ் அணி விளையாடியது.
முதலில் பேட்டிங் செய்த கேளரி பேர்ட்ஸ் அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை எடுத்தது. அந்த அணிக்காக கோமான் ஹமீத் 24 ரன்களையும், PHM சேக்கனா 17 ரன்களையும் சேர்த்திருந்தனர். KTN அணிக்காக ஸஃப்ரின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த KTN அணியினர் 9.3 ஓவர்களில் 85 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. அந்த அணிக்காக பசீர் 26 ரன்களையும், ஃபெரோஸ்கான் 14 ரன்களையும் சேர்த்தனர். கேளரி பேர்ட்ஸ் அணிக்காக PHM சேக்கனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரண்டாவது போட்டியில் காயல் ராக்கர்ஸ் அணியும், வாவு வாரியர்ஸ் அணியும் விளையாடின.
முதலில் பேட்டிங் செய்த காயல் ராக்கர்ஸ் அணியினர் 10 ஓவர்களில் 112 ரன்களை சேர்த்தனர். அந்த அணிக்காக ஆதம் 25 ரன்களையும், ஹமீத் 24 ரன்களையும் சேர்த்தனர். வாவு வாரியர்ஸ் அணிக்காக ஜூமானி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த வாவு வாரியர்ஸ் அணியினர் 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியடைந்தனர். அந்த அணிக்காக ஜூமானி 24 ரன்களை சேர்த்திருந்தார். காயல் ராக்கர்ஸ் அணிக்காக ஆதம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மூன்றாவது போட்டியில் காயல் யூனைடெ்ட அணியும், Fi-Sky Boys அணியும் விளையாடின.
முதலில் பேட்டிங் செய்த காயல் யூனைடெட் அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களை எடுத்தது. அந்த அணிக்காக கைசாலி 27 ரன்களையும், சாஹூல் 22 ரன்களையும் சேர்த்திருந்தனர். Fi-Sky Boys அணிக்காக ஜஹாங்கிர் மற்றும் சமத் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த Fi-Sky Boys அணியினர் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணிக்காக இஜாஸ் 23 ரன்களையும், அபுல்ஹஸன் 14 ரன்களையும் சேர்த்திருந்தனர். காயல் யூனைடெட் அணிக்காக முஹம்மது அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நான்காவது போட்டியில் நார்வே நைட்ரைடர்ஸ் அணியும், ஆல்காம் அணியும் விளையாடின.
முதலில் பேட்டிங் செய்த நார்லே நைட்ரைடர்ஸ் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்களை எடுத்திருந்தனர். அந்த அணிக்காக உமர் 32 ரன்களை சேர்த்திருந்தார். ஆல்காம் அணிக்காக இம்ரான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த ஆல்காம் அணியினர் 4 ஓவர்களில் விக்கெட் ஏதும் இழக்காமல் 68 ரன்களை எடுத்து வெற்றி பெற்றனர். அந்த அணிக்காக அஸார் 40 ரன்களையும், இஸ்மாயில் 14 ரன்களையும் சேர்த்தனர்.
மூன்றாம் நாள் போட்டிகள்:
மூன்றாம் நாளான இம்மாதம் 05ஆம் நாளன்று மழையின் காரணமாக இரண்டு போட்டிகள் மட்டுமே நடைபெற்றன. முதல் போட்டியில் காயல் ராக்கர்ஸ் அணியும், ஆல்காம் அணியும் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த காயல் ராக்கர்ஸ் அணியினர் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்களை எடுத்தனர். அந்த அணிக்காக ஆதம் ஆதம் 25 ரன்களையும், கமால் 16 ரன்களையும் சேர்த்தனர். ஆல்காம் அணிக்காக இம்ரான் மற்றும் அஸார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த ஆல்காம் அணியினர் 7 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை அடித்து வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக அஸார் 54 ரன்களை சேர்த்திருந்தார். காயல் ராக்கர்ஸ் அணிக்காக ஹமீத் மற்றும் அர்ஷத் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இரண்டாவது போட்டியில் கேளரி பேர்ட்ஸ் அணியும், காயல் யூனைடெட் அணியும் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த கேளரி பேர்ட்ஸ் அணியினர் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை எடுத்தனர். அந்த அணிக்காக கோமான் ஹமீத் 70 ரன்களையும், கலாமீஸ் யாஸர் 17 ரன்களையும் சேர்த்தனர். காயல் யூனைடெட் அணிக்காக முஹம்மது அலி மற்றும் முஃபீத் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த காயல் யூனைடெட் அணியினர் 10 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தனர். அந்த அணிக்காக கோமான் சாஹூல் 27 ரன்களையும், கைசாலி 14 ரன்களையும் சேர்த்தனர். கேளரி பேர்ட்ஸ் அணிக்காக கலாமீஸ் யாஸர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மழையால் இன்றைய போட்டி ரத்து:
இன்று (மே 06) நடைபெறவிருந்த போட்டிகள், நகரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று வரை நடைபெற்ற போட்டிகளில், பங்கேற்ற அணிகள் பெற்ற புள்ளிகள் விபரப்பட்டியல்:-
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
வி-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |