நடப்பு பருவம் கத்திரி வெயில் காலம் என வானிலை ஆய்வு நடுவத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாங்க முடியாத அளவுக்கு வெப்ப வானிலை நிலவும் என பொதுமக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இம்மாதம் 04ஆம் நாள் முதல் காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு மழை பெய்துகொண்டிருக்கிறது.
சாரல், தூறல், சிறுமழை, இதமழை என மாறி மாறிப் பெய்யும் இம்மழை காரணமாக, நகரில், மழைக்காலத்திற்கு ஒத்த வானிலை நிலவுகிறது. எத்திசை நோக்கினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இன்று (மே 06) காலை 08.00 மணியிலிருந்து மழை விட்டு விட்டுப் பெய்துகொண்டிருக்கிறது.
நேற்று (மே 05) பதிவு செய்யப்பட்ட காட்சிகள்:-
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |