நடப்பு பருவம் கத்திரி வெயில் காலம் என வானிலை ஆய்வு நடுவத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாங்க முடியாத அளவுக்கு வெப்ப வானிலை நிலவும் என பொதுமக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இம்மாதம் 04ஆம் நாள் முதல் காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு மழை பெய்துகொண்டிருக்கிறது.
இன்று (மே 06) காலை 08.00 மணியிலிருந்து விட்டு விட்டுப் பெய்துகொண்டிருந்த மழை, நண்பகல் 10.00 மணியளவில் வலுத்து கனமழையானது. சிறிது நேரத்தில் கனமழை ஓய்ந்து, வானம் மட்டும் மேகமூட்டத்துடன் மந்தமாகக் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
இன்று 13.30 மணி நிலவரப்படி, இருண்ட வானம் வெளிச்சம் கண்டுள்ளது. மழை பெய்வது முழுமையாக நின்றுவிட்டது.
இன்று பதிவு செய்யப்பட்ட மழைக் காட்சிகள்:-
நாளை (மே 07) காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் - மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்தாட்டப் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், மைதானத்தின் மேற்பரப்பில் சிறிதளவு மழை நீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்யாதிருந்தால் இந்த நீர்த்தேக்கம் இன்றே வற்றிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படங்களுள் உதவி:
யூனுஸ் முஸ்தஃபா
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |