காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 87ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ரஜப் 06ஆம் நாளன்று (மே 06) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையையும், அன்று - மஹான் அஜ்மீர் காஜா முஈனுத்தீன் ஜிஷ்த்தீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு நாள் என்பதால், அன்னாரது வாழ்க்கைச் சரித உரையையும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வழங்கினார்.
ஜனாஸாவின் சட்டங்கள், நல்லடக்கத்தில் பேணப்பட வேண்டிய முறைகள், ரூஹ் எனும் ஆத்மா, ஜிஸ்ம் எனும் உடல் ஆகியவற்றின் தன்மைகள் - இரண்டுக்குமிடையேயுள்ள வேற்றுமைகள், மரணித்த பின்னர் ரூஹ் எனும் ஆத்மாவின் தன்மைகள் குறித்து அவரது உரையில் செய்திகள் இடம்பெற்றன.
ரஜப் 07ஆம் நாளன்று (மே 07) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஏ.எல்.முஹம்மத் அலீ பாக்கவீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1434ஆம் ஆண்டு (கடந்தாண்டு) ஆறாம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|