காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் 49 வருடங்களைப் பூர்த்தி செய்து, தற்போது 50ஆம் ஆண்டு - பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 1955ஆம் ஆண்டு துவங்கிய இந்நிறுவனத்திற்கு, 2015ஆம் ஆண்டு பொன்விழா நிறைவு ஆண்டாகும்.
இதனை முன்னிட்டு, சங்க மைதானத்தில் பொன்விழா அரங்கம் (GOLDEN JUBILEE HALL) கட்டி முடிக்கப்பட்டு, இம்மாதம் 06ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 17.30 மணியளவில் திறப்பு விழா கண்டது. பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஓ.எஸ்.உவைஸ் கட்டிட சாவியைக் கையளிக்க, மற்றொரு மூத்த உறுப்பினர் டாக்டர் எஸ்.ஓ.செய்யித் அஹ்மத் பொன்விழா அரங்க கட்டிடத்தைத் திறந்து வைத்து, மறைந்த மூத்த உறுப்பினர்களுக்கு அர்ப்பணம் செய்தார்.
ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, செயலாளர் பி.எஸ்.எம்.இல்யாஸ், துணைச் செயலாளர் எஸ்.எம்.உஸைர், மூத்த உறுப்பினர்களான எஸ்.ஐ.தஸ்தகீர், எம்.எச்.முஹம்மத் சுலைமான், எஸ்.ஓ.கியாது, கேப்டன் ஹபீப், எஸ்.எம்.கலீல், எல்.கே.கே.லெப்பைத்தம்பி, கால்பந்து முன்னாள் வீரர் பி.மோகன் உட்பட சங்கத்தின் முன்னாள் - இந்நாள் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஆண்டுதோறும் நடத்தப்படும் - மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகளுக்காக வருகை தரும் நடுவர்கள் தங்குவதற்காக இக்கட்டிடம் பயன்படுத்தப்படவுள்ளதாக அந்நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.S.புகாரீ
துணைச் செயலாளர்
சுற்றுப்போட்டிக் குழு
படங்கள்:
M.ஜஹாங்கீர்
S.B.B.புகாரீ
ஐக்கிய விளையாட்டு சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |