பன்னிரண்டாம் வகுப்புக்கான அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. காயல்பட்டினத்தில் இருந்து ஏழு பள்ளிகளின் 519 மாணவ, மாணவியர் இத்தேர்வுகளை எழுதினர். அதில் 512 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்வு எழுதிய மாணவர்கள்: 519
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 512
தேர்ச்சி சதவீதம்: 98.65
100 சதவீதம் வெற்றிக்கண்ட பள்ளிக்கூடங்கள்:
(1) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (132/132)
(2) சுபைதா மேல்நிலைப்பள்ளி (109/109)
(3) சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி (27/27)
(4) எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி (20/20)
1000 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை: 83
நகர அளவில் முதல் இடம்:
பெயர்: அஹ்மத் பாத்திமா உம்மு அய்மன் (1169/1200)
த.பெ. எஸ்.ஏ.சி.முஹம்மத் முல்தஜிம்
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம்.
பள்ளிக்கூடம்: சுபைதா மேல்நிலைப்பள்ளி
நகர அளவில் இரண்டாம் இடம்:
பெயர்: எஸ்.எம்.எஸ். மஹ்மூது சுல்தான் (1167/1200)
த.பெ. செய்யித் முஹம்மத் ஷாதுலீ
மகுதூம் தெரு, காயல்பட்டினம்.
பள்ளிக்கூடம்: எல்.கே. மேல்நிலைப்பள்ளி
நகர அளவில் மூன்றாம் இடம்:
பெயர்: பி.மேனகா (1156/1200)
த.பெ. எஸ்.பாலசுப்பிரமணியன்
உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு, காயல்பட்டினம்.
பள்ளிக்கூடம்: எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 18:25 / 10.05.2014]
கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |