காயல்பட்டினத்தில் நடைபெற்ற - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்பு முகாமில், ஏராளமானோர் உறுப்பினராவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய முஸ்லிம்களின் தாய்ச்சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைமையின் உத்தரவுக்கிணங்க, காயல்பட்டினம் நகர கிளை சார்பில் - உறுப்பினர் சேர்ப்பு முகாம், இம்மாதம் 24ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளிக்கு வெளியே - பள்ளியின் கிழக்குப் பகுதியிலும், மன்பஉல் பரக்காத் சங்கம் அருகிலும், மஹ்ழரா அரபிக்கல்லூரி அருகிலும் என 3 இடங்களில் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
கட்சியின் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பாளர் ஆர்.பீ.ஷம்சுத்தீன்,
நகர நிர்வாகிகளான எம்.எல்.ஷேக்னா லெப்பை, பெத்தப்பா சுல்தான், எம்.இசட்.சித்தீக், எச்.எம்.ஜிஃப்ரீ, அரபி ஷாஹுல் ஹமீத், ஜெ.சுல்தான், என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஏ.கே.மஹ்மூத் சுலைமான், எம்.எம்.மொகுதூம் கண் ஸாஹிப், செய்யித் ஹுஸைன், எஸ்.டீ.கமால், எஸ்.ஏ.கே.முஜீபுர்ரஹ்மான், சோனா அஹ்மத் தம்பி, எலக்ட்ரீஷியன் பஷீர் அஹ்மத், பீ.எம்.எஸ்.அமானுல்லாஹ், கே.எம்.டீ.சுலைமான், எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கி, விபரங்களைப் பதிவு செய்வதற்கு வழிகாட்டி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இம்முகாமின் தொடர்ச்சியாக, இம்மாதம் 31ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி, பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி ஆகிய பள்ளிகளில் முகாமிட்டும், அதன் பிறகு பகுதி வாரியாகச் சென்றும் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகர நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.A.இப்றாஹீம் மக்கீ
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |