காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அக்டோபர் மாத சாதாரண கூட்டத்தில் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அக்டோபர் மாதத்திற்கான சாதாரண கூட்டம், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், இம்மாதம் 20ஆம் நாள் திங்கட்கிழமையன்று 11.30 மணி துவங்கி, 15.30 மணி வரை நடைபெற்றது.
பங்கேற்றோர்:-
09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா தவிர்த்து அனைத்து உறுப்பினர்களும், நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் மற்றும் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டப் பொருட்களும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும்:
போதிய உறுப்பினர்கள் வராததால் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒத்திவைக்கப்பட்ட கூட்டப் பொருட்கள் மற்றும் நடப்பு அக்டோபர் மாதத்திற்கான கூட்டப் பொருட்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டப் பொருட்களும், தீர்மானங்களும் வருமாறு:-
பயோ காஸ் திட்டம் அமைத்திட பெருவாரியான உறுப்பினர்கள் அடையாளம் காட்டும் காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடம் பொருத்தமில்லை என சில அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், இது குறித்த தொழில்நுட்ப சாத்தியகூறு அறிக்கையை நகர்மன்றத் தலைவர் கோரியுள்ளார். தொழில்நுட்ப ரீதியாக இடம் முடிவு செய்யப்பட்ட பின், இதுகுறித்து முடிவெடுக்கலாம் என்றும், அதுவரை இப்பொருளை ஒத்திவைத்தும் தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட தொகையை விட, செலவு தொகை குறைவு என்பதால், செலவு தொகையை தீர்மானத்தில் எழுதவேண்டும் என நகர்மன்றத் தலைவர் கூறினார்.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான மதிப்பீடு தயாரித்து, அதன்படி பணியை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது..
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புகார்கள் பெறப்பட்டால் என்ன நடவடிக்கை என தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கேட்க, ஒப்பந்தக்காரரை அழைத்துப் பேசி, தீர்வு காணப்பட்ட பின்னரே ஒப்பந்தத்தைத் தொடரச் செய்யலாம் என ஆணையர் கூறினார்.
ஆரம்பக் கேள்வித் தொகையை ரூபாய் 12,500 என்று மாற்றி, ஏலம் விட தீர்மானிக்கப்பட்டது.
ஆடு அறுக்க மட்டுமே அங்கு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், மாடு அறுக்கவென நகராட்சியால் ஒதுக்கப்பட்ட சிறிய அறை அத்தேவையைப் பூர்த்தி செய்யாது என்பதால், அனைத்திற்கும் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின் ஏலம் விடவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அறுப்புத் தொட்டி அமைந்துள்ள பகுதியில் தண்ணீர் வசதி முறையாகச் செய்யப்படவில்லையாதலால் அசுத்த நீரிலேயே இறைச்சிகளும், இடமும் கழுவப்படுவதாகவும், உடனடியாக இக்குறை களையப்பட வேண்டும் என்றும் உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்த, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக ஆணையர் உறுதியளித்தார்.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உத்தேச செலவுத் தொகை மிக அதிகமாக இருப்பதால், மூன்று நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளி பெற்று, அதனடிப்படையில் முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பொருள் குறித்து உறுப்பினர்கள் விளக்கம் கேட்க, நகராட்சி ஆணையர் விளக்கமளித்தார்.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது அரசு அறிவிப்பாக இருந்தாலும், நகர ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளிடம் கலந்தாலோசித்த பின்பே இதுகுறித்து முடிவு செய்யப்பட வேண்டும் என்று உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து இப்பொருள் ஒத்தி வைக்கப்பட்டது.
ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பணியைச் செய்திட தீர்மானிக்கப்பட்டது.
ஒத்தி வைத்து தீர்மானமியற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடற்கரைப் பூங்காவில் சிறு வியாபாரிகளிடம் வசூல் செய்ய ஆர்.எஸ்.கோபல் என்பவருக்கு எவ்வாறு ஏலம் விடப்பட்டது என்ற கேள்விக்கு முறையான விளக்கம் நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை.
அண்மைக் காலமாக கடற்கரையில் குப்பைகள் ஏராளமாகத் தேங்கியிருப்பதாகவும், ஒப்பந்தம் வழங்கப்பட்டவர் ஒப்பந்தப்படி அவற்றைத் துப்புரவு செய்யத் தவறுகையில், மேல் நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
பேருந்து நிலைய கட்டணம் கழிப்பிடதிற்கான ஆரம்ப கேட்பு தொகை - 12,500 ரூபாய் என மாற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போதைய கூட்டப்பொருளில் நகர்மன்றத் தலைவரால் இணைக்கப்படாத தளவாணிமுத்து எடுத்துள்ள ஒப்பந்தப்புள்ளிகள் அடுத்த கூட்டத்தில் விவாதத்திற்கு வரும் போது இந்த பொருள் குறித்தும் விவாதிக்கலாம் என பெருவாரியான உறுப்பினர்கள் கூறவே ஒத்தி வைத்து தீர்மானமியற்றப்பட்டது.

தற்போதைய கூட்டப்பொருளில் நகர்மன்றத் தலைவரால் இணைக்கப்படாத தளவாணிமுத்து எடுத்துள்ள ஒப்பந்தப்புள்ளிகள் அடுத்த கூட்டத்தில் விவாதத்திற்கு வரும் போது இந்த பொருள் குறித்தும் விவாதிக்கலாம் என பெருவாரியான உறுப்பினர்கள் கூறவே ஒத்தி வைத்து தீர்மானமியற்றப்பட்டது. 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அது பதிவு செய்யப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆகஸ்ட் மாத கூட்டப்பொருள் 01இன் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒத்தி வைத்து தீர்மானமியற்றப்பட்டது.
மன்றம் அனுமதி வழங்கியது.
பட்ஜெட் விபரங்கள் கூட்டத்தில் வழங்கப்படவில்லை. இது குறித்து வினா எழுப்பப்பட்டவுடன், சில உறுப்பினர்களிடம் மட்டும் சிறு குறிப்பு - பட்ஜெட் என அதிகாரிகளால் காண்பிக்கப்பட்டது. நகர்மன்றத் தலைவர் - பட்ஜெட் முறையாக அதிகாரிகளால் வழங்கப்படவில்லை என தெரிவித்தார். இருப்பினும் பெருவாரியான உறுப்பினர்கள் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டதாக கூறினர். துணைத் தலைவர் மட்டும் விபரங்கள் தமிழில் இல்லை எனத் தெரிவித்தார். அவரது எதிர்ப்பும், முறையாக பட்ஜெட் விபரங்கள் வழங்காமல் எந்த செலவீனங்களும் செய்யக்கூடாது என்ற நகர்மன்றத் தலைவரின் குறிப்பும் பதிவு செய்யப்பட்டது.
நெய்னார் தெரு சாலை விசயத்தில் ஒப்பந்ததாரர் தளவாணிமுத்து - சாலையில் ஒரு லேயர் போடாததால் அவருக்கு வழங்கப்பட வேண்டிய தொகையில் சுமார் 2 லட்சம் பிடிக்கப்பட்டதாகவும், அதனை அபராதமாக கருதக்கூடாது எனவும் கூறப்பட்டது. எனவே - தளவாணிமுத்துவை தடை செய்ய அவசியம் இல்லை என அனைத்து உறுப்பினர்களும் தெரிவித்தனர். ஒரு லேயர் போடாததும் முறைக்கேடு என்றும், நெய்னார் தெரு சாலையை தவிர்த்து பல பணிகளை தளவாணிமுத்து முறையாக செய்யவில்லை என்றும், எனவே அவரை தடை செய்ய வேண்டும் என்றும் நகர்மன்றத் தலைவர் கூறினார். இருப்பினும் - பெருவாரியான உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாததால், தளவாணிமுத்துவிற்கு நகர்மன்றம் தடை விதிக்கவில்லை.
மேசைப் பொருள்:
நகர்மன்றம் நன்றி தீர்மானம் நிறைவேற்றியது.
கூட்டத் துளிகள்...
01ஆவது வார்டின் புதிய உறுப்பினருக்கு நகர்மன்றத் தலைவர் சால்வையளித்து வரவேற்பு:
காயல்பட்டினம் நகராட்சியின் 01ஆவது வார்டுக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, புதிய உறுப்பினராக தனது முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்ட எஸ்.ஐ.அஷ்ரஃபுக்கு நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சால்வை அளித்து, அவரது பணி சிறக்க வாழ்த்தி வரவேற்றார்.
மேசைப் பொருளைத் துவக்கமாக விவாதிக்க வற்புறுத்தல்:
கூட்டப் பொருட்களை முதலிலும், அவசியம் கருதி மேசைப் பொருள் இறுதியாகவும் விவாதிக்கப்படுவது நகர்மன்றக் கூட்ட மரபு. ஆனால், இக்கூட்டத்தில் தீர்மானமியற்றுவதற்காக ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட வாசகத்தை மேசைப் பொருளாகக் கொண்டு, முதலில் அதுகுறித்து விவாதிக்குமாறும், இதர கூட்டப் பொருட்களை அதற்குப் பிறகு விவாதிக்கலாம் என்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் நகர்மன்றத் தலைவரை வற்புறுத்த, மரபுப் படி கூட்டப் பொருட்களை முதலில் விவாதித்த பின், வடிவமைக்கப்பட்ட வாசகத்தை மேசைப் பொருளாக இணைத்து அதுகுறித்தும் தீர்மானம் நிறைவேற்றலாம் என நகர்மன்றத் தலைவர் கூறினார். ஆனால் அதற்கு உறுப்பினர்கள் உடன்படவில்லை. இதன் காரணமாக, கூட்டப் பொருள் வாசிக்கப்படாமலேயே நீண்ட நேரம் கழிந்தது.
பார்வையாளர்களாக முன்னாள் தற்காலிகப் பணியாளர்கள்:
இக்கூட்டத்தில், சுமார் 20 பேர் வரை பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். காயல்பட்டினம் நகராட்சியில் தற்காலிகப் பணியாளர்களாகப் பணியாற்றி, பணிக்காலம் நீட்டிப்பு வழங்கப்படாத - ரோஜா சுய உதவிக் குழுவைச் சேர்ந்த சிலரும் இக்கூட்டத்தில் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், தற்காலிகப் பணியாளர்கள் குறித்த கூட்டப் பொருள் குறித்து விவாதிக்கப்பட்டபோது, பேச முனைந்த முன்னாள் தற்காலிகப் பணியாளர் ஒருவரை மன்ற உறுப்பினர்கள் தடுக்கவே, அவர் நிறுத்திக்கொண்டார்.
கள உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
மற்றும்
M.ஜஹாங்கீர்
காயல்பட்டினம் நகராட்சியில், இதற்கு முன் (கடந்த ஜூன் மாதம்) நடைபெற்ற சாதாரண கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|