காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், 54 பயனாளிகளுக்கு தொழில் செய்ய கருவிகள் நலத்திட்ட உதவிகளாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 10 பயனாளிகளுக்கு ஏற்கனவே தொழிற்கருவிகள் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 23 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட வினியோகம் இம்மாதம் 25ஆம் நாள் புதன்கிழமையன்று, காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு வளாகத்தில், எஸ்.எம்.உஸைர் தலைமையில் நடைபெற்றது. வாவு எஸ்.காதிர் ஸாஹிப், எஸ்.ஐ.தஸ்தகீர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். எம்.எல்.ஷேக்னா லெப்பை வரவேற்றுப் பேசினார்.
முதற்கட்ட வினியோகத்தைத் தொடர்ந்து, முன்னதாக கே.எம்.டீ. மருத்துவமனைக்கு எக்கோ கருவி வாங்குவதற்காக 1 லட்சம் ரூபாய் தொகையை, செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், துணைத்தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலையில், அதன் முன்னாள் தலைவர் எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீயிடம், ஹாங்காங் பேரவை ஆலோசகர் மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் வழங்கினார்.
அண்மையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளைச் செய்து வரும் மழை - வெள்ள நிவாரணக் குழுவின் மூலம் ஒரு பயனாளிக்கு வசிப்பிடம் அமைக்க 60 ஆயிரம் ரூபாய் தொகையை, அதன் பொறுப்பாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பையிடம் ஹாங்காங் பேரவை ஆலோசகர் பீ.எம்.ஆர்.மர்ஸூக் வழங்கினார்.
இவை தவிர, நடப்பு நிகழ்ச்சியின்போது, 13 பயனாளிகளுக்கு மாவு அரைக்கும் க்ரைண்டர், 13 பேருக்கு தையல் இயந்திரங்கள், 8 பேருக்கு ஓவன் அடுப்பு, ஒருவருக்கு இட்லி தொழில் செய்யத் தேவையான கருவிகள், ஒருவருக்கு தேனீர் விற்பனைக்கான கேன், ஒருவருக்கு சரக்கு ஏற்றும் மிதிவண்டி ஆகியன வழங்கப்பட்டன.
எம்.எச்.செய்யித் முஹம்மத் ஸாஹிப், டீ.எம்.ஆர்.மர்ஸூக், ஆர்.எஸ்.அப்துல் கய்யூம், ஏ.ஆர்.அப்துல் வதூத், கே.வீ காதர், குளம் முஸ்தஃபா கமால் ஆகியோர் அவற்றை பயனாளிகளிடம் வழங்கினர்.
சில பொருட்கள், பயனாளிகள் சார்பில் பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டன.
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை நன்றி கூற, அதன் முன்னாள் துணைச் செயலாளர் ஹாஃபிழ் வி.எம்.எல்.மொகுதூம் அப்துல் காதிர் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. ஹாங்காங் பேரவை உள்ளூர் பிரதிநிதி எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
தகவல்:
காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் சார்பாக
எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ
(உள்ளூர் பிரதிநிதி)
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |