சென்ட்ரல் துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடத்தப்பட்டு, சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் சென்ட்ரல் துவக்கப்பள்ளியின் 65ஆவது ஆண்டு விழா இம்மாதம் 14ஆம் நாள் சனிக்கிழமையன்று 16.00 மணியளவில், பள்ளி வளாகத்தில், எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ தலைமையில் நடைபெற்றது.
என்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன், ஏ.எச்.நெய்னா ஸாஹிப், வி.எம்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.டீ.ஜாஃபர் ஸாதிக், எஸ்.எச்.அப்துல் கஃப்ஃபார் ரிழ்வான், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷாஹுல் ஹமீத், ஓ.ஏ.கே.செய்யித் அலீ ஃபாத்திமா, எம்.ஏ.கே.முஹ்யித்தீன் தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை எஸ்.ஜுனைதா ராணி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். தலைமையாசிரியர் எஸ்.பாபு வரவேற்றுப் பேசினார். பள்ளி தாளாளர் வாவு எம்.எம்.மஸ்னவீ வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து, பள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர், சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேடையில் அங்கம் வகித்தோர் பரிசுகளை வழங்கினர். ஆசிரியர் ஏ.ஏ.பீர் முஹம்மத் நன்றி கூறினார்.
தகவல் & படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
சென்ட்ரல் துவக்கப்பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற ஆண்டு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சென்ட்ரல் துவக்கப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |