DCW தொழிற்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, தேசிய பசுமை
தீர்ப்பாயத்தில் ஜூலை 3 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி
தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA
சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மே 26, 2014 அன்று தீர்ப்பாயத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வழக்கு, தொடர்ந்து ஜூலை 10, 2014, ஆகஸ்ட் 28, 2014, நவம்பர் 13,
2014, டிசம்பர் 2, 2014, ஜனவரி 29, 2015, பிப்ரவரி 25, 2015, மார்ச் 17, 2015 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு
வந்தது.
மார்ச் 17 அன்று - வழக்கில் ஆறாவது எதிர்மனுதாரரான CHOLAMANDALAM MS RISK SERVICES LTD நிறுவனம் தனது பதிலை தாக்கல் செய்தது.
ஆறு எதிர் மனுதாரர்களில், ஏனைய ஐந்து மனுதாரர்களான - DCW நிறுவனம், தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், DCW தொழிற்சாலைக்கு
ஆவணங்கள் தயார் செய்த இரு நிறுவனங்களில் ஒன்றான PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல்
துறை ஆகியோர் ஏற்கனவே பதில் தாக்கல் செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து - எதிர் மனுதாரர்களின் பதில்களுக்கான பதில் (REJOINDER) தாக்கல் செய்ய காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பாக
கால அவகாசம் கோரப்பட்டது. இதனை தொடர்ந்து - வழக்கினை மே 13 க்கு தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.
பதிவாளர் நீதிமன்றத்தின் (REGISTRAR'S COURT) முன்பு இவ்வழக்கு மே 13 மற்றும் மே 28 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வந்தப்போது, பதில்
தாக்கல் செய்ய, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பாக மேலும் கால அவகாசம் கோரப்பட்டது.
ஜூன் மாதம் - தீர்ப்பாயம் விடுமுறை என்பதால், விடுமுறைக்கு பிறகு - ஜூலை 3 அன்று - நீதிபதி எம்.சொக்கலிங்கம் மற்றும் நிபுணர் உறுப்பினர்
பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் வழக்கு வந்தது. அன்று - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பாக, ஆறு எதிர்மனுதாரர்கள்
தாக்கல் செய்திருந்த பதில்களுக்கான (COUNTER-AFFIDAVITS) விரிவான பதில் (REJOINDER) - தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து - இரு தரப்பும் தங்கள் வாதங்களை துவங்கிட, ஆகஸ்ட் 4 தேதிக்கு வழக்கினை தீர்ப்பாணையம் ஒத்திவைத்தது.
இவ்வழக்கில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, டாக்டர் வி.சுரேஷ் மற்றும் பிரீஸ்ட்லி
மோசஸ் ஆகியோர் ஆஜராகின்றனர்.
மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் திருமதி சி.சங்கமித்திரை, DCW நிறுவனம் சார்பாக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கட்டவதன் மற்றும் நிவேதிதா,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் திருமதி ரீதா சந்திரசேகர், தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எம்.கே. சுப்ரமணியம்
மற்றும் எம்.ஆர்.கோகுல் கிருஷ்ணன், PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவன்ம் சார்பாக வழக்கறிஞர் வி.ஸ்ரீனிவாச பாபு,
CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED சார்பாக வழக்கறிஞர் பி.பிரேம்குமார் ஆகியோர் இவ்வழக்கில் ஆஜராகின்றனர். |