காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், வழமை போல இவ்வாண்டும் இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி நேற்று (ஜூலை 03 - வெள்ளிக்கிழமை) 18.00 மணியளவில், பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை தலைமையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கிராஅத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இலங்கை கொழும்பு தாருல் ஹதீஸ் அமைப்பின் இயக்குநர் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ ஃபாழில் தேவ்பந்தீ, “நோன்பின் மகத்துவம்” எனும தலைப்பில் சிற்றுரையாற்றினார்.
நன்றியுரையைத் தொடர்ந்து. பள்ளியின் அரபி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ துஆ இறைஞ்சினார்.
அதனைத் தொடர்ந்து நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர் புட்டி, கறிகஞ்சி, வடை வகைகள், பழக்கூழ், குளிர்பானம் ஆகிய உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் துணைத் தலைவர் எஸ்.எம்.உஸைர், துணைச் செயலாளர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, பெற்றோர் - ஆசிரியர் கழக செயலாளர் பாளையம் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் பீ.எஸ்.எம்.இல்யாஸ், எல்.கே.மேனிலைப்பள்ளியை உள்ளடக்கிய 13ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், மகுதூம் ஜும்ஆ பள்ளியின் நிர்வாகி ஏ.ஆர்.லுக்மான், எல்.கே. பள்ளிகளின் ஆட்சிக்குழுவினர், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற்ற பின்னர், மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது.
தகவல்:
திருச்சியிலிருந்து...
எல்.கே.லெப்பைத்தம்பி
கள உதவி:
‘வீனஸ் ஸ்டூடியோ’ மணி
கடந்த ஆண்டு (ஹிஜ்ரீ 1435) இப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 13:48 / 05.07.2015] |