காயல்பட்டினம் உட்பட ஆறுமுகநேரி துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று (ஜூலை 05 ஞாயிற்றுக்கிழமை) 22.30 மணி முதல் ஜூலை 06 திங்கட்கிழமை 00.15 மணி வரை 01.45 மணி நேரமும், மீண்டும் 01.40 முதல் 01.45 மணி வரை 5 நிமிடங்களும் திடீர் மின்தடையானது.
காயல்பட்டினத்தில் ரமழான் இரவு நேரங்களில் பள்ளிவாசல்கள் மற்றும் பெண்கள் தைக்காக்களில் நீண்ட நேரத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என்பதால், அந்நேரத்தில் ஏற்பட்ட இந்த மின்தடையால் பொதுமக்களுக்கு பெரும் அவதி ஏற்பட்டது.
இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் கோவில்களில் குருபெயர்ச்சி விழாவில் கலந்துகொள்ளச் சென்ற பக்தர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக மின் வாரியத்தில் விசாரித்ததில், இளநிலை மின் பொறியாளர் ராமச்சந்திரன் தனக்கு விடுமுறை கேட்டதாகவும், மின் வாரிய அதிகாரிகள் செவிசாய்க்காததால் மின் வினியோகத்தைத் துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சவுந்திரராஜன் - இளநிலை செயற்பொறியாளர் ராமச்சந்திரனை திங்கட்கிழமையன்று தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார்.
3. விசாரித்தால் தான் தெரியும் posted byK.S.Seyed Mohamed Buhary (Abu Dhabi )[07 July 2015] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41247
ராமச்சந்திரனிடமும் போய் கேட்ட தெரியும். அவர் ஒரு வேலை சௌதர் ராஜன் சார் தான் இத சென்ஜாருண்டு சொல்லலாம்
4. Re:... posted byshahulhameed sak (malaysia)[07 July 2015] IP: 113.*.*.* Malaysia | Comment Reference Number: 41249
இதற்க்கு மேல் அதிகாரிகள்தான் பொறுப்பு, மேல் நிலையில் இருப்பவர்கள்
கீழ் நிலை ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு செவி சாய்க்க வேண்டும்,
இல்லையென்றால் மனநிலை பாதிக்கப் பட்டு நிலைமை விபரீதமாகும்?
நல்லவேளை மின்சாரத்தை நிறுத்துவதோடு நின்று கொண்டாரே!
6. பணிநீக்கம் என்பது நாடகமா? posted byN.S.E.மஹ்மூது (காயல்பட்டணம்)[07 July 2015] IP: 61.*.*.* India | Comment Reference Number: 41252
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
” மின் வாரிய அதிகாரிகள் செவிசாய்க்காததால் மின் வினியோகத்தைத் துண்டித்ததாக கூறப்படுகிறது “ என்று இந்த செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது – இது எந்தளவு உண்மை? என்று தெரியவில்லை!!.
---------------------------------
சம்பவம் ஒரு வேளை உண்மையாக இருக்கலாம்!
ஆனால் ” இளநிலை செயற்பொறியாளர் திரு. இராமச்சந்திரனை திங்கட்கிழமையன்று தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுவது உண்மையா? “
இல்லை திரு. குமார் என்பவர் மக்களை சமதானப்படுத்துவதற்காக சொன்ன வாசகமா?
அல்லது பணிநீக்கம் என்ற பெயரில் ஒரு நாள் மட்டும் கண்துடைப்புக்காக தற்காலிக பணிநீக்கம் செய்வது போல் நாடகமாடிவிட்டு – பிறகு அவர் எதுவும் செய்யவில்லை இது மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாரே காரணம் என்பார்களோ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross