வரும் ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளையடுத்து, இலங்கையிலுள்ள காயலர்களை ஒருங்கிணைத்து இன்பச் சுற்றுலா செல்வதென, இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) நடத்திய இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலாளர் பி.எம்.ரஃபீக் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இலங்கை காயல் நல மன்றம் காவாலங்கா அமைப்பின் சார்பில் 2015 ஜுலை 1ம் தேதி மாலை 5.30 மணி அளவில் இப்தார் நோன்பு துறப்பு ஒன்றுகூடலுடன், பொதுக்குழுக் கூட்டம் கொழும்பு Buhary & Co இல்லத்தில் நடைப்பெற்றது.
மன்றத்தின் தலைவர் M.S. ஷாஜஹான் ஹாஜி அவர்கள் வெளிநாட்டில் இருப்பதால் செயலாளர் B.M. ரபீக் அவர்கள் துவக்கி வைத்தார். மன்ற உறுப்பினர் S.M. ஜெய்னுலாப்தீன் ஹாபிஸ் அவர்களால் கிராத் ஓதப்பட்டது.
உறுப்பினர்களின் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. மன்றத்தின் நிதி நிலைமைகளை மேம்படுத்த ஆலோசனைகள் செய்யப்பட்டன. இதற்கான நிதி திரட்டும் பணிகளை மேற்கொள்ள மன்ற உறுப்பினர்களான கலாமி செய்யது உமர் மற்றும் Berlux இஸ்மாயில் பொறுப்பேற்று கொண்டனர்.
காயல் பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து புலமைப் பரிசில் வழங்குவதில் இந்த வருடமும் தொடர்ந்து பங்களிப்பு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது.
தாய்லாந்து காயல் நலமன்ற (TAKWA) அமைப்பின் முன்னெடுப்பில் செயல்படுத்தபடும். காயல்பட்டினம் நகர பள்ளிகளின் இமாம், முஅத்தின்களுக்கான ரமலான் ஊக்க தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த வருடமும் நமது மன்றத்தின் சார்பில் பங்களிப்பு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இலங்கை வாழ் மக்களுக்கும் எம் மன்றத்தின் சார்பில் நல்லுதவிகள் செய்ய வேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டது.
புதுடெல்லியில் அமைந்துள்ள AIMS மருத்துவமனையில் தகுதி அடிப்படையில் மேற்ப்படிப்புக்காக நமதூரைச் சேர்ந்த Dr. I. நாசிக் ஹசன் (S/o, I. இம்தியாஸ் அகமது) 2014லும் & Dr. S.O சுலைமான் (S/o, M.S. செய்யது உமர்) 2015லும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஹாஜி B.M. நஜ்முத்தீன் அவர்கள் அறிவித்தார்கள். அவர்கள் இருவருக்கும் மன்றத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் வரும் ஹஜ்ஜு பெருநாள் கழித்து மன்ற உறுப்பினர்களை ஒன்று கூட்டி அவுடிங் (பிக்னிக்) செல்ல ஆலோசனை செய்யப்பட்டது.
அதன் பிறகு இப்தார் நிகழ்ச்சியை தொடர்ந்து மஃக்ரிப் தொழுகைக்கான ஜமாத் சம்மாங்கோட்டு பள்ளியின் முஅத்தின் நியாஸ் ஹாபிஸ் அவர்களால் நடத்தப்பட்டது.
இறுதியாக தேநீர் விருந்துடன் பொதுக்குழு கூட்டம் இனிதாக நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.H.முஹம்மத் லெப்பை
காவாலங்கா சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காவாலங்கா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |