திராவிட முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்டிடத்தில், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, நேற்று (ஜூலை 08 புதன்கிழமை) மாலையில் நடைபெற்றது.
கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆ பிரார்த்தனை செய்தார்.
திமுக காயல்பட்டினம் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், அதன் மாவட்ட - நகர நிர்வாகிகள், அங்கத்தினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், அதன் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், மதிமுக மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினரும், பொதுநல அமைப்பினரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் கறிகஞ்சி, வடை வகைகள், பேரீத்தம்பழம், குளிர்பானம், பழக்கூழ், கடற்பாசி உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
படங்கள்:
‘வீனஸ் ஸ்டூடியோ’
திமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |