சென்னையில் வசிக்கும் காயலர்களுக்காக, அவர்களது வாராந்திர விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில், புரசைவாக்கத்திலுள்ள காயல் டெலிகாம் நிறுவனத்தின் மொட்டை மாடியில் நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 100 முதல் 125 பேர் வரை கலந்துகொள்கின்றனர்.
கறிகஞ்சி, வடை வகைகள், பேரீத்தம்பழம், பழச்சாறு, பழக்கூழ், குளிர்பானம் உள்ளிட்டவை நோன்பாளிகளுக்குப் பரிமாறப்படுகிறது. ஜூலை 05 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இஃப்தார் நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
இங்கு ஆண்டுதோறும் ரமழான் மாதங்களில் அன்றாடம் நடைபெறும் தராவீஹ் தொழுகைக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பாளர்களே இந்த வருடம் முதல் வாராந்திர நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
சென்னையிலிருந்து...
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்
செய்தியாக்கம்:
S.K.ஸாலிஹ் |