இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றுள்ள சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் 50ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில் திரளான உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எமது ரியாத் காயல் நற்பணி மன்ற 50-வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்வுகள் 03.07.2015 வெள்ளிகிழமையன்று ஃபத்ஹா Shifa Al Jaseera Polyclinic Party Hall-ல் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் P.S.J. ஜைனுல் ஆப்தீன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
மன்ற உறுப்பினர் சகோதரர் அபுல் ஹசன் ஷாதுலி அவர்களின் மகன்.ஹாபிழ்மாணவர்.தாவூத் ஷாதுலி அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கிவைக்க நம்மன்ற உறுப்பினர் இன்னிசைத்தென்றல் சகோதரர்.S.H.செய்கு அப்துல் காதிர் அவர்கள் இனிமையான பாடல் ஒன்றை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
மன்ற செயல்பாடுகள்:
இம்மன்றம் தெடங்கியது முதல் இன்றுவரை நகர் நலனுக்காக ஆற்றிவரும் பணிகளை செயற்குழு உறுப்பினர் நயீமுல்லாஹ் அவர்கள் விரிவாக மன்ற உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
தொகுப்புரை:
பின்னர்,மன்ற ஆலோசகர் M.E.L. செய்யிது அஹ்மது நுஸ்கி அவர்கள், உறுப்பினர்கள் மன்றத்தின் செயல்பாடுகளில் தங்களை ஈடுபத்திக் கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.
மேலும் தனது உரையில் மன்றத்தின் ரமலான் உணவுப்பொருள் 125 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதையும், மேலும் இவ்வரான செயல்திட்டங்கள் விரிவடைய அனைத்து உறுப்பினர்களின் ஈடுபாடும் அவசியம் என வேண்டினார்.
புறநகர் பள்ளிகளுக்கு உதவி திட்டம்:
அதனைத் தொடர்ந்து மன்ற ஆலோசகர் கூஸ் S.A.T. முஹம்மது அபூபக்கர் அவர்கள்,எமது மன்றம் அடிப்படை வசதிகள் குறைந்த அளவில் உள்ள புறநகர் பள்ளிகளுக்கு (அருணாசலபுரம், மங்கலவாடி, ஓடக்கரை, அலியார் தெரு), அதன் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் இலவச சீருடை, பாட புத்தகம் ஆகிய பொருட்களை எம்மன்ற காயல் பிரதிநிதி தர்வேஷ் முஹம்மது மற்றும் மன்ற துனைத் தலைவர் P.M.S.முஹம்மது லெப்பை ஆகியோருடன் நேரில் சென்று விநியோகித்த அனுபவத்தை உறுப்பினர்கள் மத்தியில் பகிர்ந்துக்கொண்டார்.
சிறப்பு விருந்தினர் உரை:
சிறப்பு விருத்தினர் பேராசிரியர் சாகுல் ஹமீது உரையாற்றினார்.
தனது உரையில் ,ரக்வா வின் செயல் திட்டங்கள் , மற்றும் செயல்பாடுகள் தன்னை வெகுவாக கவர்ந்திர்ப்பதாகவும், இந்த அமைப்பு நிறைய கொடையளிகளை உருவாக்கி , நாளை மறுமை வாழ்விற்கு நன்மை பயக்க கூடிய செயல் திட்டங்களை செய்துவருவதாகவும், தான் பார்த்த வரை மருத்துவத்திற்கு நிறைய செலவிடப்படுகின்றது என்றும், நம் நாட்டை பொறுத்தவரை சிறு நோயில் இருந்து பெரிய நோய்கள் வரை எளிதாக அரசாங்கத்திடம் இருந்து இலவச மருத்துவ உதவி பெற முடியும் என்றும் , அதற்காக தான் பிரத்தியோகமாக ஒரு ப்ராஜெக்ட் பண்ணி இருப்பதாகவும் அதை ரக்வா பயன்படுத்திகொள்ளும் பட்சத்தில் தான் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் இதன் மூலம் நம்முடைய பணம் மிட்சப்படுத்தப்பட்டு மற்ற நல்ல காரியங்களுக்கு செலவிடலாம் என்றும் கூறி தன்னுடைய மருத்துவ ப்ராஜெக்டில் இருந்து சில முக்கியமானதை உறுப்பினர்களுக்கு மத்தியில் வெண்திரையில் விளக்கி சிறப்புரையாற்றினார்.
வலைதளம் (uthavumkarangal.org) ஒரு அறிமுகம்:
மன்ற துணைத்தலைவர் முஹம்மது நூஹு அவர்கள் உருவாக்கியுள்ள உதவும் கரங்கள்.ஆர்க் என்ற வலைதளத்தின் செயல்பாட்டை உறுப்பினர்களுக்கு விளக்கினார். உலக காயல் நல மன்றங்களை இணைக்கும்பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், நமதூர் தேவைகளுக்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் அந்தந்த மன்றத்தின் குடையின் கீழ் எங்கிருந்து வேண்டுமானாலும் மருத்துவம்/கல்வி/சிறுதொழில் வேண்டி வரும் விண்ணப்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டலாம் என்பதே இவ்வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்பதையும் எடுத்துரைத்தார். மேலதிகமாக இணையும் மன்றங்களின் சந்தாதாரர்கள் விபரங்களை வலைத்தளத்தில் ஏற்றி கணக்கு விபரங்களை பாதுகாத்து கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நோன்புப்பெருநாள் விடுப்பில் வரும் மற்ற மன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் DEMO செய்து காட்டப்படும்.
நன்றியுரை:
நிறைவாக ஹாஃபிழ் P.S.J. ஜைனுல் ஆப்தீன் அவர்களின் நன்றியுரை மற்றும் இறைப்பிரார்த்தனைக்குப் பின் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுப் பெற்றது. நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
N.M.செய்யித் இஸ்மாயீல்
ஹாஃபிழ் S.A.C. அஹ்மத் ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர் - ரியாத் கா.ந.மன்றம்)
ரியாத் காயல் நல மன்றம் சார்பில் ஹிஜ்ரீ 1434இல் நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய (49ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |