சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பீ.ஐ.) கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம், 26.06.2015 வெள்ளிக்கிழமை மாலையில், காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள உணவக கட்டிடத்தில் நடைபெற்றது.
கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவீ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - தூத்துக்குடி மாநகராட்சிக்குக் கோரிக்கை:
தூத்துக்குடி மாநகராட்சியாகி 7 ஆண்டுகளாகியும், குடிநீர் - சுகாதாரம் – சுற்றுப்புறச் சூழல், சாலை மேம்பாடு உள்ளிட்டவற்றில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதுள்ளது. அரசு மற்றும் ஆளும் வர்க்கத்தினரால் அவ்வப்போது வழங்கப்படும் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுவதில்லை. நிலுவையிலுள்ள பணிகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றிட இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2 - உடன்குடி மீன் அரவை ஆலையை நிரந்தரமாக மூட கோரிக்கை:
உடன்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைப் பாதிக்கும் மீன் அரவை ஆலையை நிரந்தரமாக மூட அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 - DCW ஆலைக்கெதிராக சென்னையில் போராட்டம்:
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள DCW ஆலையின் சுற்றுச்சூழல் விரோத நிலைக்கு எதிராக எஸ்.டி.பீ.ஐ. கட்சி, சென்னையில் வரும் ஆகஸ்ட் 21ஆம் நாளன்று நடத்தும் போராட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்ள இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - குலசையில் மதுபானக் கடையை அகற்ற கோரிக்கை:
குலசேகரன்பட்டினத்தில், வழிபாட்டுத் தலம் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றிட அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்னர்.
தொடர்ந்து இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அக்கட்சியினரும், நகரின் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.
எஸ்.டி.பீ.ஐ. கட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |