தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் / மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் திரளானோர் பங்கேற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் / மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நேற்று (25.06.2016. சனிக்கிழமை) மாலையில், காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையிலுள்ள தமுமுக நகர கிளை அலுவலக மேல் மாடியில், நகர செயலாளர் ஆஸாத் தலைமையில் நடைபெற்றது.
தமுமுக மாவட்ட செயலாளர் யூஸுஃப், மமக மாவட்ட பொருளாளர் மோத்தி முஸ்ஸம்மில், தமுமுக மாவட்ட பொருளாளர் காதர், மமக மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் முர்ஷித், தமுமுக நகர செயலாளர் ஹஸன், மமக நகர செயலாளர் ஐதுரூஸ், தமுமுக நகர பொருளாளர் எஸ்.டீ.செய்யித் இப்றாஹீம், தமுமுக நகர துணைச் செயலாளர் எம்.கே.ஜாஹிர் ஹுஸைன், மருத்துவ அணி செயலாளர் மவ்ஜூத், மமக நகர துணைச் செயலாளர்களான ரியாஸ், ரஃபீக், ஆர்.பீ.எஸ்.நவாஸ், மமக நகர பொருளாளர் ஷம்சுத்தீன், மமக நகர துணைச் செயலாளர் யூஸுஃப் மற்றும் தமுமுக / மமக வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகளும், அங்கத்தினரும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
நோன்பு துறக்க அனைவருக்கும் பேரீத்தம்பழம், பழ வகைகள், வடை வகைகள், நோன்புக் கஞ்சி, குளிர்பானம் ஆகியன பரிமாறப்பட்டன.
தகவல்:
K.முஹ்ஸின்
(முர்ஷித் டிஜிட்டல் ஜெராக்ஸ்)
தமுமுக / மமக சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|