காயல்பட்டினம் ஜாவியாவில், ஆண்டுதோறும் ரமழான் மாதம் முழுக்க (வெள்ளிக்கிழமை தவிர்த்து) அனைத்து நாட்களிலும் காலை 11.00 மணி முதல் ளுஹ்ர் நேரம் வரை மார்க்க அறிஞர்களால் தொடர் சொற்பொழிவு நடத்தப்பட்டு வருகிறது.
ஜூன் 28 செவ்வாய்க்கிழமை, ஐக்கிய சமாதானப் பேரவை தலைவரும் / தாருஸ்ஸலாம் தஃவா சென்டர் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ உரையாற்றினார்.
இன்று (ஜூன் 29 புதன்கிழமை, மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக் கல்லூரி - அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் துணை முதல்வருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ உரையாற்றுகிறார்.
அன்றாடம் நிகழ்த்தப்படும் உரைகளின் ஒலி நேரலையை, http://m.ustream.tv/channel/zaviakayal?lang=en_SG என்ற இணையதள பக்கத்தில் சொடுக்கிக் கேட்கலாம்.
தகவல்:
ஹாஃபிழ் M.A.செய்யித் முஹம்மத்
(தொடர்பு எண்: +91 94423 62353)
ஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|