காயல்பட்டினம் ஜாவியாவில், ஆண்டுதோறும் ரமழான் மாதம் முழுக்க (வெள்ளிக்கிழமை தவிர்த்து) அனைத்து நாட்களிலும் காலை 11.00 மணி முதல் ளுஹ்ர் நேரம் வரை மார்க்க அறிஞர்களால் தொடர் சொற்பொழிவு நடத்தப்பட்டு வருகிறது.
ஜூன் 26 ஞாயிற்றுக்கிழமை மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக் கல்லூரி - அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் துணை முதல்வருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ உரையாற்றினார். இன்றும் (ஜூன் 27 திங்கட்கிழமை) அவரே உரையாற்றுகிறார்.
1. Re:...அந்த 60 மணி துளிகள் இன்னும் 7 நாட்கள்.. posted bymackie noohuthambi (Kayalpatnam)[28 June 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 44130
மாஷா அல்லாஹ் . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் . பொறுக்கியெடுத்த தலைப்புக்கள் குறிப்பெடுத்து வைத்த இறை வசனங்கள் நறுக்கு தெறித்தால்போல் நபி மொழிகள்.
கருவறை முதல் மண்ணறை வரை மனித வாழ்வின் கடந்து வரும் பாதைகள். அல்லாஹ்வுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் மனித இனத்துக்கு செய்ய வேண்டிய சேவைகள் நல்லொழுக்கங்கள். மாணவர்கள் மாணவிகள் உழைக்க கல்வி மார்க்கட் கல்வி. பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள். மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகள். பெண்களின் உரிமைகள் கடமைகள் . வாழ்வின் எல்லா துறைகளுக்குமான வாழ்வியல் தத்துவங்கள்.
சரியாக காலை 11 மணிக்கு ஆரம்பித்து சரியாக 12 மணிக்கு நிறைவு செய்யும் நேரம் தவறாமை எல்லாமே இங்கு நம்மை அந்த 60 மணித்துளிகளில் கட்டிப் போட்டு வைத்து நம் உள்ளம் வேறெங்கும் அலைமோதாமல் இருக்க செய்யும் அற்புத நிகழ்ச்சி.
இன்னும் 7 நாட்கள்.
நமது இல்ல திருமணங்கள் மார்க்க பிரசங்கங்கள் எல்லாமே இந்த நேர மேலாண்மையை கடைப் பிடித்து ஒழுகினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் மீதி நாட்களிலும் நம்மை அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு நற்பயன் அடைய அல்லாஹ் அருள்புரிவானாக . ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross