காயல்பட்டினம் காட்டு தைக்கா தெரு - தைக்கா தெரு - சிவன்கோயில் தெரு - பாக்கர் காலனி - தருவை ஆகிய தெருக்களுக்கு நடுவில் அமைந்துள்ளது, மஸ்ஜித் அல்அரூஸ் எனும் காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளிவாசல்.
நிர்வாகம்:
இப்பள்ளியின் தலைவராக ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் சுல்தான், செயலாளராக ஹாஜி எஸ்.எம்.பி.மூஸா நெய்னா, நிர்வாகிகளாக ஏ.ஷாஹுல் ஹமீத், ஜெ.எம்.காதிர் ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர்.
இமாம் – பிலால் - தராவீஹ் இமாம்:
இப்பள்ளியின் இமாமாக காயல்பட்டினத்தைச் சேர்ந்த எம்.என்.கமர் அலீ என்பவர் பணியாற்றி வருகிறார். முஅத்தின் பணிக்கு தற்காலிகமாக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடப்பாண்டு தராவீஹ் தொழுகையை, காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த ஸதக்கத்துல்லாஹ் என்பவரது மகன் ஹாஃபிழ் இஃஜாஸ் அஹ்மத், மகுதூம் தெருவைச் சேர்ந்த ரஈஸுத்தீன் என்பவரது மகன் ஹாஃபிழ் அர்ஷத் ஆகியோர் பொறுப்பேற்று வழிநடத்தி வருகின்றனர். தராவீஹ் தொழுகையில் திருமுறை குர்ஆன் முழுதும் ஓதி முடிக்கப்படுகிறது.
இஷா தொழுகை 20.30 மணிக்கும், தராவீஹ் தொழுகை 20.50 மணிக்கும் துவங்கி நடைபெற்று வருகிறது.
இஃப்தார் ஏற்பாடுகள்:
இப்பள்ளியில், வழமை போல இவ்வாண்டும் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு, ஜமாஅத்திற்குட்பட்ட குடும்பத்தினருக்கு ஊற்றுக்கஞ்சி வினியோகிக்கப்பட்டதுடன், நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.
நாள்தோறும் வினியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியை, இப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர். இஃப்தார் நிகழ்ச்சியில் 40 பேர் முதல் 80 பேர் வரை கலந்துகொண்டனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், கஞ்சி, வடை, தண்ணீர் ஆகியன பரிமாறப்படுகின்றன. 12.06.2016. அன்று மாலையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள்:-
வெண்கஞ்சி அருகிப்போன இக்காலகட்டத்திலும், இப்பள்ளியில் ஆண்டுதோறும் வெண்கஞ்சியே பெரும்பாலும் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு கஞ்சி கமிட்டியினராக எஸ்.ஏ.முஹம்மத் சுல்தான், எஸ்.ஐ.அஹ்மத், ஜெ.எம்.ஏ.காதிர், கே.ஸாலிஹ், எஸ்.எச்.உமர் ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர்.
தகவல்:
S.H.முஹம்மத் உமர் (எ) ‘ரிஃப்அத்’ உமர்
காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பள்ளியின் வரலாறு உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அரூஸிய்யா பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நகர பள்ளிகளில் நடப்பாண்டு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்ற தகவல்களடங்கிய முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|