காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவையடுத்து, சதுக்கைத் தெரு துவக்கத்திலேயே அமைந்துள்ளது அஹ்மத் நெய்னார் பள்ளி.
நிர்வாகம்:
ஹாஜி எஸ்.கே.ஜெய்னுல் ஆப்தீன் பள்ளியின் தலைவராக இருந்து, நிர்வாகத்தை வழிநடத்தி வருகிறார்.
இமாம் - பிலால்:
அபுல்ஹஸன் ஷாதுலீ ஸதக்கலீ பள்ளியின் இமாமாகவும். ஜெஸ்மின் இஸ்மாஈல் அதன் பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.
ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுகையில் திருமறை குர்ஆன் முழுதும் ஓதி முடிக்கப்படுகிறது. நடப்பாண்டு தராவீஹ் தொழுகையை, சதுக்கைத் தெருவைச் சேர்ந்த கோனா ஷெய்க் அலீ நுஸ்கீ என்பவரது மகன் ஹாஃபிழ் முஹம்மத் அபூபக்கர், நெய்னார் தெருவைச் சேர்ந்த ஜமால் முஹம்மத் என்பவரது மகன் ஹாஃபிழ் செய்யித் ஐதுரூஸ் ஆகியோர் நடப்பாண்டு ரமழான் தராவீஹ் தொழுகையை வழிநடத்தி வருகின்றனர்.
ரமழான் மாதம் முழுக்க இஷா தொழுகை 20.45 மணிக்கும், தராவீஹ் தொழுகை 21.00 மணிக்கும் துவங்கி நடைபெற்று வருகின்றன.
இஃப்தார் ஏற்பாடுகள்:
இப்பள்ளியில் ஆண்டுதோறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்காக நோன்புக் கஞ்சி தயாரிக்கப்படுகிறது. ஊற்றுக்கஞ்சி வினியோகம் கிடையாது. நாள்தோறும் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகளில் 100 முதல் 125 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர், வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
16.06.2016. அன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள்:-
படங்களுள் உதவி:
K.M.N.உமர் அப்துல் காதிர்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) அஹ்மத் நெய்னார் பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அஹ்மத் நெய்னார் பள்ளியின் வரலாறு அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அஹ்மத் நெய்னார் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நகர பள்ளிகளில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |