காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியையாக 01.06.2009. அன்று பொறுப்பேற்றுக்கொண்ட மு.ஜெஸீமா, இன்று பணி நிறைவில் விடைபெற்றுச் சென்றார்.
இதனை முன்னிட்டு, இன்று 15.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் அவருக்குப் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் அனைத்து ஆசிரியையர், அலுவலர்கள், முன்னாள் - இந்நாள் மாணவியர், பெற்றோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியையின் சேவையை நினைவுகூர்ந்து பலர் உரையாற்றினர். நிறைவாக, தலைமையாசிரியை மு.ஜெஸீமா ஏற்புரையாற்றினார்.
தனது பணிக்காலத்தில் முழு ஒத்துழைப்பளித்தமைக்காக அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், புதிதாகப் பொறுப்பேற்கும் தலைமையாசிரியைக்கும் இதே போன்ற ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தனது பணிக்காலத்தில் யாருடைய மனமேனும் புண்படும் வகையில் நடந்திருப்பின், இறைவனுக்காக தன்னைப் பொருந்திக்கொள்ளுமாறு அவர் உருக்கமுடன் கேட்டுக்கொண்டார்.
பள்ளியின் புதிய தலைமையாசிரியையாகப் பொறுப்பேற்கும் பீர் ஃபாத்திமாவை அனைவருக்கும் அவர் தலைமையாசிரியையாக அறிமுகப்படுத்தி, அவரது பணி சிறக்க வாழ்த்தினார்.
பின்னர் அலுவலகம் வந்த அவர், புதிய தலைமையாசிரியையிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, விடைபெற்றுச் சென்றார்.
அவரை, பள்ளியின் அனைத்து மாணவியரும் உற்சாகக் குரலெழுப்பி, நன்றி தெரிவித்து, கண்ணீர் மல்க வாழ்த்தி வழியனுப்பினர்.
பின்னர், தான் தலைமையாசிரியையாகப் பணியாற்றிய இதுநாள் வரை முழு ஒத்துழைப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, பின்வருமாறு அறிக்கையை அளித்தார்:-
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியை பத்மாவதி விடைபெற்ற தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |