காயல்பட்டினம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில், நகரின் ஏழைப் பெண்களுக்கு பெருநாள் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 26.06.2016. ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில், எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ தலைமையில் நடைபெற்றது.
எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், ஜெஸ்மின் ஏ.கே.கலீல், சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான், ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், வி.டி.என்.அன்ஸாரீ, வழக்குரைஞர் அஹ்மத், எம்.எல்.ஷேக்னா லெப்பை, எஸ்.எம்.அப்துல் காதிர் என்ற சின்னத்தம்பி ஆகிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது. கே.அப்துல் லத்தீஃப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் வரவேற்றுப் பேசினார். முஸ்லிம் மகளிர் உதவும் சங்க அமைப்பாளர் அ.வஹீதா திட்ட விளக்கவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 900 ஏழை மகளிருக்கு, நோன்புப் பெருநாளை முன்னிட்டு - புடவை, சுடிதார், அரிசி உள்ளிட்ட பொருட்கள் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்பட்டன. மேடையில் வீற்றிருந்த பிரமுகர்கள் அவற்றை பயனாளிகளுக்கு வழங்கினர்.
நன்றியுரையைத் தொடர்ந்து, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் ஹிஜ்ரீ 1435 நோன்புப் பெருநாளையொட்டி உதவிப் பொருட்கள் வழங்கப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|