மாநில அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற - காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவருக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பணப்பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளார். விபரம் வருமாறு:-
இந்திய குழந்தைகள் நல வாரியத்தின் சார்பில், 2015ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவர் டீ.ஹைதர் அலீ ஷகீக் முதலிடத்தைப் பெற்றார்.
27.06.2016. அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார், அவருக்கு ஆயிரம் ரூபாய் பணப்பரிசையும், சான்றிதழையும் வழங்கிப் பாராட்டினார்.
இப்போட்டியில் கலந்துகொண்ட - தூத்துக்குடி சுப்பையா வித்யாலாய மகளிர் மேனிலைப்பள்ளியின் எம்.ஜோதிகா, கே.ஆர்த்திஸ்ரீ, பிரதாப், ஆர்.சாந்தினி, தூத்துக்குடி புனித லசால் மேனிலைப்பள்ளியின் எஸ்.அஜீஸ், தூத்துக்குடி ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் பி.கார்த்திக், தூத்துக்குடி ஹோலி கிராஸ் மகளிர் மேனிலைப்பள்ளியின் எம்.இப்ராஹீம், முஹ்ஸினா, கோவில்பட்டி அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் எம்.சுமதி ஆகிய எட்டு மாணவ-மாணவியருக்கும் மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.முருகையா, சமூக பாதுகாப்புத்துறை தனித்துறை ஆட்சியர் & நேர்முக உதவியாளர் (பொது பொறுப்பு) காமராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முத்து எழில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.ஜெகவீரபாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
முதற்பரிசை வென்ற எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவர் டீ.ஹைதர் அலீ ஷகீக்கை, பள்ளி தாளாளர், நிர்வாகிகள், தலைமையாசிரியை மீனா சேகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
எல்.கே.மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|