காயல்பட்டினம் பரிமார் தெரு - அலியார் தெருவை அணைத்தாற்போல் - ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் முகப்புடன் அமைந்துள்ளது மஸ்ஜித் அஸ்ஸூக் என்ற கடைப்பள்ளிவாசல்.
[படங்கள்: கோப்பு]
நிர்வாகம்:
இப்பள்ளியில், ‘பெயிண்டர்’ மீரான், அபூபக்கர், பஷீர், உதுமான் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக சேவையாற்றி வருகின்றனர்.
இமாம் - பிலால்:
இப்பள்ளியின் இமாமாக காயல்பட்டினம் மரைக்கார் பள்ளி தெருவைச் சேர்ந்த செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் என்பவரும், பிலாலாக காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த எம்.எஸ்.அஹ்மத் ஸாமுனா லெப்பை என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இட நெருக்கடி, கட்டிடத்தில் பழுது ஆகிய காரணங்களுக்காக, இப்பள்ளி கட்டிடத்தின் பழைய அமைப்பு மாறாமல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக, துவங்கிய பணிகள் நிறைவுறா நிலையிலேயே ஆண்டுகள் கடந்து வருகின்றன.
இப்பள்ளியில், நாள்தோறும் ஐவேளைத் தொழுகை தவிர, ரமழான் காலங்களில் தராவீஹ் சிறப்புத் தொழுகை நடத்தப்படுகிறது. நடப்பாண்டு தராவீஹ் தொழுகையை காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஜாஃபர் ஸாதிக் என்பவரது மகன் ஜெ.எஸ்.அல்தாஃப், கி.மு.கச்சேரி தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ ஆகியோர் வழிநடத்துகின்றனர்.
ரமழான் மாதம் முழுக்க இஷா தொழுகை 20.15 மணிக்கும், தராவீஹ் தொழுகை 20.30 மணிக்கும் துவங்கி நடைபெற்று வருகிறது.
இஃப்தார் ஏற்பாடுகள்:
வழமை போல இவ்வாண்டும், நாள்தோறும் இஃப்தார் - நோன்பு துறப்பிற்காக கஞ்சி தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான நாட்களில் பிரியாணி கஞ்சியே தயாரிக்கப்படுகிறது. ஊற்றுக்கஞ்சி வினியோகம் செய்யும் வழமை இப்பள்ளியில் இல்லை.
நாள்தோறும் நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் 100 முதல் 150 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு - பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், வடை, கஞ்சி, வெண்கஞ்சி எனில் சட்னி உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்படுகின்றன.
20.06.2016. அன்று மாலையில், இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-
இப்பள்ளியில், ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில், நகரிலுள்ள அனைத்து ஜமாஅத் - பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், நகரப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டு, சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, மார்க்க அறிஞரைக் கொண்டு சொற்பொழிவும் நிகழ்த்தப்படுவது வழமை. அந்த அடிப்படையில், நடப்பாண்டும் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைப்பள்ளியில் கடந்த ஹிஜ்ரீ 1435ஆம் ஆண்டு நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடைப்பள்ளியின் வரலாறு உள்ளிட்ட முக்கிய தகவல்களை உள்ளடக்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடைப்பள்ளியின் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகர பள்ளிகளில் நடப்பாண்டு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டமை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|