மனிதநேய ஜனநாயக கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில் திரளானோர் பங்கேற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
மனிதநேய ஜனநாயக கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் கடைப்பள்ளி எதிரிலுள்ள கட்சியின் அலுவலக மொட்டை மாடியில், 26.06.2016. ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில், கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாஹிர் ஹுஸைன் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ஆர்.ஷாஹுல் ஹமீத் முன்னிலையில் நடைபெற்றது.
அஹ்மத் நவாஸ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். கட்சியின் நகர செயலாளர் எம்.ஏ.ஆஸாத் வரவேற்றுப் பேசினார். கே.ஸைஃபுல்லாஹ் சிறப்புரையாற்றினார். இளைஞரணி நகர செயலாளர் மொகுதூம் மீராஸாஹிப் நன்றி கூறினார். இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் ஏ.முஹம்மத் நஜீப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
பின்னர் இஃப்தார் - நோன்பு துறப்பு நடைபெற்றது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை வகைகள், குளிர்பான வகைகள் பரிமாறப்பட்டன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சியின் அங்கத்தினரும், அதிமுக சார்பில் அதன் நிர்வாகிகளான எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், காயல் மவ்லானா, மஜக உடன்குடி நகர செயலாளர் பரக்கத்துல்லாஹ், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜைனுல் ஆப்தீன் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை, கட்சி நிர்வாகிகளான எம்.மீரான், இசட்.எம்.ஜியாவுத்தீன், ஜரீத் மன்ஸூர், கே.ராசிக், கே.யூஸுஃப் அலீ, எஸ்.எம்.ஜிஃப்ரீ, சுலைமான், நாசர், ஜக்கரிய்யா, சத்தாம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
மனிதநேய ஜனநாயகக் கட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|