சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றுள்ளது. திரளான உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எமது ரியாத் காயல் நற்பணி மன்ற 52-வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்வுகள் 24.06.2016 வெள்ளிகிழமையன்று ஃபத்ஹா Shifa Al Jaseera Polyclinic Party Hall-ல் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை உறுப்பினர் ஹாஃபிழ் P.S.J. ஜைனுல் ஆப்தீன் அவர்கள் தொகுத்தளித்தார்.
மன்ற துணை தலைவர் சகோதரர் சூபி அவர்களின் மகன். அபூ தல்ஹா அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கிவைக்க, வந்தோரை அகமகிழ்வோடு என்மன்ற துணை செயலாளர் சதக்கத்துல்லாஹ் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேறுப்புரை ஆற்றினார்
அடுத்து மன்ற உறுப்பினர் இன்னிசைத்தென்றல் சகோதரர். பக்கீர் முஹையதீன் (அய்யம்பேட்டை ) அவர்கள் இனிமையான பாடல் ஒன்றை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
மன்ற செயல்பாடுகள்
இம்மன்றம் தெடங்கியது முதல் இன்றுவரை நகர் நலனுக்காக ஆற்றிவரும் பணிகளை மன்ற ஆலோசகர் M.E.L. செய்யிது அஹ்மது நுஸ்கி அவர்கள் விரிவாக மன்ற உறுப்பினர்களுக்கு விளக்கினார். அதனை தொடர்ந்து நாம் ஏன் ரியாத் காயல் நல மன்றத்தில் இணைத்து பணியாற்ற வேண்டும் , அதனால் இறைவனிடத்தில் கிடைக்கும் நண்மைகள் என்ன என்பனவற்றை விரிவாக பட்டியலிட்டு மன்ற ஆலோசகர் ஹைதர் அலி அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். அடுத்து மற்றும்மொரு பாடலை எம்மன்ற உறுப்பினர் S.H.செய்கு அப்துல் காதிர் அவர்கள் பாடினார்.
தொகுப்புரை
மன்ற ஆலோசகர் கூஸ் S.A.T. முஹம்மது அபூபக்கர் அவர்கள், மன்றத்தின் ரமலான் உணவுப்பொருள் 178 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதையும், மேலும் இவ்வாரான செயல்திட்டங்கள் விரிவடைய அனைத்து உறுப்பினர்களின் ஈடுபாடும் அவசியம் என வேண்டினார். மேலும் இந்த திட்டத்தினை ஊரில் இருந்து சிறப்பாக செயல்படுத்திய எம்மன்ற உள்ளூர் பிரதிநிதி சகோ. தர்வேஷ் அவர்கள் பயனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்தினை வாட்ஸ் அப் மூலம் பேசி அனுப்பியதை உறுப்பினர்கள் மத்தியில் போட்டு காண்பித்தார். இந்த நல்ல நேரத்தில் சகோ தர்வேஷ் அவர்களுக்கும் மன்றம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
நன்றியுரை
மன்ற செயலாளர் முஹ்ஸின் தனது நன்றி உரையில் இவ்விழா சிறப்பாக நடந்தேற அருள் பாளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு முதலில் நன்றி தெரிவித்து , கலந்து கொண்ட அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் , பணியாற்றிய செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடவசதி தந்த Shifa Al Jazeera Hospital நிருவாகத்தினர்களுக்கும் குறிப்பாக ,இந்த இஃப்தார் நிகழ்ச்சிக்கான உணவு பண்டங்களாக காயல் பிரியாணி கஞ்சி , கட்லெட் , சமோசா , பெட்டிஸ் மற்றும் கடற்பசி போன்றவற்றை தயார் செய்து தந்த சகோ நுஸ்கி , சகோ S.A.C. சாலிஹ் , சகோ இபுறாகீம் பைஸல் மற்றும் நயீமுல்லாஹ் அவர்களுக்கும் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயலாற்றிய எம்மன்ற துணை பொருளாளர் வெள்ளி சிததீக் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்.
நிறைவாக செயற்குழு உறுப்பினர் நயீமுல்லாஹ் அவர்களின் இறைப்பிரார்த்தனைக்குப் பின் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுப் பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் இறுதியாக அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.N.முஹம்மத் ஹஸன்
(பொருளாளர் – ரியாத் கா.ந.மன்றம்)
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) ரியாத் கா.ந.மன்றம் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தாருடன் கூடிய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய (51ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|