காயல்பட்டினம் ஜாவியாவில், ஆண்டுதோறும் ரமழான் மாதம் முழுக்க (வெள்ளிக்கிழமை தவிர்த்து) அனைத்து நாட்களிலும் காலை 11.00 மணி முதல் ளுஹ்ர் நேரம் வரை மார்க்க அறிஞர்களால் தொடர் சொற்பொழிவு நடத்தப்பட்டு வருகிறது.
ஜூன் 30 வியாழக்கிழமை, மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக் கல்லூரி - அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் துணை முதல்வருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ உரையாற்றினார்.
இன்று (ஜூலை 02 சனிக்கிழமை) மவ்லவீ ஹாஃபிழ் ஷெய்க் அலீ நுஸ்கீ காஷிஃபீ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.செய்யித் அஹ்மத் ஸாலிஹ் யூஸுஃபீ ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
அன்றாடம் நிகழ்த்தப்படும் உரைகளின் ஒலி நேரலையை, http://m.ustream.tv/channel/zaviakayal?lang=en_SG என்ற இணையதள பக்கத்தில் சொடுக்கிக் கேட்கலாம்.
தகவல்:
ஹாஃபிழ் M.A.செய்யித் முஹம்மத்
(தொடர்பு எண்: +91 94423 62353)
ஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|