காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், வழமை போல இவ்வாண்டும் இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி நேற்று (ஜூன் 23 - வியாழக்கிழமை) 18.00 மணியளவில், பள்ளி தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை தலைமையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
முதுநிலை அரபி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ, “நோன்பின் மகத்துவம்” எனும தலைப்பில் சிற்றுரையாற்றினார்.
நன்றியுரையைத் தொடர்ந்து. துஆவுடன் மேடை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
பின்னர், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், கறிகஞ்சி, வடை வகைகள், குளிர்பானம் ஆகிய உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் துணைத் தலைவர் எஸ்.எம்.உஸைர், துணைச் செயலாளர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, பெற்றோர் - ஆசிரியர் கழக செயலாளர் பாளையம் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, மகுதூம் ஜும்ஆ பள்ளியின் நிர்வாகி ஏ.ஆர்.லுக்மான், எல்.கே. பள்ளிகளின் ஆட்சிக்குழுவினரான எல்.கே.கே.லெப்பைத்தம்பி, எல்.கே.லெப்பைத்தம்பி, நகரப் பிரமுகர்களான ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், விளக்கு மீராலெப்பை ஆகியோருடன் - பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற்ற பின்னர், மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது.
தகவல்:
எல்.கே.லெப்பைத்தம்பி
கடந்த ஆண்டு (ஹிஜ்ரீ 1436) இப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|