காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் புதிய செயற்குழுவால் நடத்தப்பட்ட முதல் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலத் திட்டங்களுக்காக 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் பீ.எம்.ஐ.ஸஊத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் புதிய செயற்குழுவின் முதலாவது கூட்டம் 11.06.2016 சனிக்கிழமையன்று, அமைப்பின் புதிய தலைவர் ஹாஃபிழ். ஏ.எல்.முஹம்மது இர்ஷாத் அலி இல்லத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேரவை தலைவர் ஹாஃபிழ். ஏ.எல்.முஹம்மது இர்ஷாத் அலி துவக்கமாக கிராஅத் ஓதி, அதனை தொடர்ந்து வரவேற்புரையாற்றினார்.
பேரவையின் புதிய செயற்குழுவின் அங்கத்தினரை வாழ்த்தி வரவேற்றுப் பேசிய அவர், நகர் மற்றும் சமுதாய நலனுக்காக அனைவரும் இணைந்து பணியாற்றவும், முந்திய செயற்குழுவினர் விட்டு சென்றுள்ள திட்டப்பணிகளை புதிய நிர்வாகக் குழுவினரும் சிறந்த முறையில் முன்னெடுத்துச்செல்ல வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அடுத்து, செயலாளர் பி.எம்.ஐ.சவூத் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் 28.05.2016 அன்று நடைபெற்ற பேரவையின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையையும் வாசிக்க, அதனைத்தொடர்ந்து அக்கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து உருப்பினர்கள் கருத்து பறிமாற்றம் செய்து கொண்டனர்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கை சமர்பிக்கப்பட்டு ஒப்புதலளிக்கப்பட்டது.
தீர்மானங்கள்:
அடுத்து, நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1. பேரவையின் ஆலோசனைக் குழுவினராக அனுபவமிக்க மூத்த உருப்பினர்கள் ஐவர் தேர்வு செய்யப்பட்டனர்.
2. 2016-17 வருடத்திற்கான தமது உறுப்பினர் பதிவை (Membership) புதுப்பித்துக்கொள்ளாத ஹாங்காங் மற்றும் சீனாவில் வசித்து வரும் உறுபினர்களை தொடர்பு கொண்டு அவர்களை இவ்வமைப்பின் உறுப்பினர்களாக விரைவில் புதுப்பிக்கச் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3. காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள பயனாளிகளுக்கு சிறுதொழில் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக ரூபாய் 1.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
4. SHIFA ஷிஃபா மருத்துவ விண்ணப்பங்களுக்கு உதவ ரூபாய் 25 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
5. பேரவையின் புதிய தையல் தொழில் அமைப்பு KUF HONG KONG GARMENTS & TAILORING பற்றிய தகவலை உலகளாவிய காயல் நல மன்றங்களுக்கு சுற்றறிக்கையின் வாயிலாக முறைப்படி தெரிவிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் பி.எம்.ஐ.சவூத் நன்றி கூற, ஹாஃபிழ். எம்.எஸ்.ஷேக் தாவூத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், பேரவையின் செயற்குழுவினர் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
மஃரிப் தொழுகைக்கு பிறகு பங்கேற்ற அனைவருக்கும் நிகழ்விடத்திலேயே சுவையான இஃப்தார் தலைவர் ஏ.எல். முஹம்மது இர்ஷாத் அலி அவர்கள் குடும்பத்தினரால் வழங்கி உபசரிக்கப்பட்டது. குழுப்படம் பதிவு செய்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் பேரவையின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாங்காங் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|