விஸ்டம் பப்ளிக் பள்ளியின் விளையாட்டு விழா, மாணவ-மாணவியரின் பல்சுவை கலை நிகழ்ச்சிகள், உடற்பயிற்சிகளுடன் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
காயல்பட்டினம் விஸ்டம் பள்ளியில் 4ம் ஆண்டு விளையாட்டு விழா 27.08.16 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
திரு D. ஆப்ரஹாம் சாம்சன் உடற்கல்வி இயக்குநர் V V பொறியியல் கல்லூரி, திசையன்விளை. அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்கள். ஜனாப் M.I. மெகர் அலி, ஜனாப் செயது முகமது அஜ்வது அவர்களும் முன்னிலை வகித்தார்கள். சிறப்பு விருந்தினர் அவர்கள் விளையாட்டுப் போட்டிகளை முறையாக தொடங்கி வைத்தார்கள்.
தடகளப் போட்டிகள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாணவ மாணவியர்கள் கூட்டு உடற்பயிற்சியினை சிறப்பாக செய்தனர்.
கராத்தே பயிற்சிகளும் மாணவ மாணவியரால் நடத்திக் காட்டப்பட்டது. பள்ளி மாணவர்கள் A. முகம்மது பாஹிம், S.M.R. ஜலால் ராஷித், M.A.K.முகம்மது ஜலால், T. முகமது அஃ ப்ரித், A.H. முஜாஹித், R. ராஷித் அவர்களது கை விரல்களில் மீது கார் ஏற்றி சாதனை புரிந்தார்கள்.
பார்வையாளர்களும் மற்றும் பெற்றோர்களும் நடைபெற்ற அத்தனை போட்டிகளையும் பாராட்டினார்கள் .பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு ட்ரஸ்ட்டின் தலைவர் ஜனாப் T.A.S.முகம்மது அபுபக்கர் தலைமை வகித்தார்கள் பள்ளியின் முதல்வர் ஜனாப் M.A.முகம்மது ஹனிபா அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரையாற்றினார்கள்.
பள்ளியின் டிரஸ்ட்டி ஜனாப் மின்ஹாஜ் மொஹிதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். பின்பு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சபயர் அணி தட்டிச் சென்றது. மிக இளையோர் (Sub Junior) பிரிவில் M.Sஆலியா (Ruby Team) , M.H.முஹம்மது மொஹிதீன் (Ruby Team), இளையோர் (Junior) பிரிவில் S.D. நிஃமத்சாரா (Sapphire Team) G.M.அபூபக்கர் (Sapphire Team) மூத்தோர் பிரிவில் (Senior) S.I. ஆயிஷா நிதா (Sapphire Team), யூனுஸ் முஹம்மது மொஹிதீன் (Ruby Team) மிக மூத்தோர் (Super Senior) S.L. ஹசன் ஜாபிர் (Emerald Team) , S. ஷரிபா ஸுஹைரா (Emerald Team) சிறந்த வீரர் வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி செயலாளர் ஜனாப் A.A.C.நவாஸ் அஹமது அவர்களின் நன்றியுரைக்குப் பின்னர் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
அனைத்து நிகழ்சிகளையும் பள்ளி முதல்வர் ஜனாப் M.A.முகம்மது ஹனிபா மற்றும் தலைமை ஆசிரியை திருமதி A.N.ஹைருன் நிஷா தலைமையில் ஆசிரியர் ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தார்கள். பெற்றோர்களும் முக்கிய விருந்தினர்களும் வந்திருந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர்.
விளையாட்டு விழாவின் அனைத்து நிகழ்வுகளையும், http://wisdompublicschool.org/photo-gallery/#gg_cg_3103 என்ற இணைப்பில் சொடுக்கி, படத்தொகுப்பாகக் காணலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|