CCTV கேமராக்கள் நிறுவிட வலியுறுத்தி அல்ஜாமியுல் அஜ்ஹர் ஜும்மா பள்ளி, தாயிம்பள்ளி, கே.எம்.டி. மருத்துவமனை உட்பட நகரின் அனைத்து ஜமாத்துகளுக்கும், ஊர் நல கமிட்டிகளுக்கும் - நேரடியாக சந்தித்து நடப்பது என்ன? குழுமம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. இது சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் நகரில் - கடந்த சில ஆண்டுகளாக, திருட்டு, கொலை, போதை பொருட்கள் / மது பானம் விற்பனை உட்பட பல வகையான குற்றங்கள் பெருகியுள்ளதை தாங்கள் அறிவீர்கள். அவ்வித குற்றங்கள் தொடர்ந்து நம் நகரில் நடைபெறாமல் இருக்க - ஒரு வழிமுறையாக, நகரின் சாலைகளை, 100 சதவீதம் CCTV கேமரா கண்காணிப்பில் கொண்டு வர அனைத்து ஜமாத்துகளுக்கும், ஊர் நல கமிட்டிகளுக்கும் - நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் சார்பாக கடந்த ஜூலை மாதம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
தற்போது நகரின் பல்வேறு பகுதிகளில் CCTV கேமரா பொறுத்தப்பட்டிருந்தாலும், நகரின் பெருவாரியான பொது வீதிகள் CCTV கண்காணிப்பில் - இன்றும் இல்லாமல் உள்ளது.
எனவே - இது சம்பந்தமாக மீண்டும் வலியுறுத்தி, அல்ஜாமியுல் அஜ்ஹர் ஜும்மா பள்ளி, தாயிம்பள்ளி, கே.எம்.டி. மருத்துவமனை உட்பட நகரின் அனைத்து ஜமாத்துகளுக்கும், ஊர் நல கமிட்டிகளுக்கும் - நடப்பது என்ன? மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த சந்திப்புகளின் போது, வாடகைக்கு குடித்தனம் வருபவர்களின் விபரங்களை விண்ணப்பங்களில் சேகரிக்க - ஜமாத்தினர்களுக்கு அறிவுறுத்தும்படியும் கோரப்பட்டு மாதிரி படிவமும் வழங்கப்பட்டது.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |