| |
செய்தி எண் (ID #) 18665 | | | வெள்ளி, ஐனவரி 13, 2017 | விரைவில் திறக்கப்படவுள்ள “மக்கள் மருந்தக”த்தில் பணிபுரிய மருந்தாளுநர் தேவை! ஷிஃபா அறிவிப்பு!! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 2267 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய | |
பொதுமக்கள் தமக்குத் தேவையான ஆங்கில மருந்துகளை மிகவும் மலிவான விலையில் பெற்றிடச் செய்யும் நோக்கில், மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் “பிரதம மந்திரி - மக்கள் மருந்தகம்” (Generic Medical Shop) நிறுவனத்தை, காயல்பட்டினத்திலும் விரைவில் துவக்கிட, உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ & பொதுநலத் துறை கூட்டமைப்பான ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் ஆயத்தப் பணிகளைச் செய்து வருகிறது.
இந்த மக்கள் மருந்தகத்தில் பணியாற்ற, மருந்தாளுநர் தேவைப்படுவதாக தற்போது ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் அறிவித்துள்ளது. அறிவிப்பு வருமாறு:-
மருந்தாளூனர் தேவை
உலக காயல் நல மன்றங்களின் அனுசரனையில், நம் காயல் மாநகரில் மருத்துவ சேவையாற்றும் அமைப்பு ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்டாகும்.
ஷிஃபா டிரஸ்ட் மருத்துவ சேவையின் தொடர்ச்சியாக பொதுமக்கள் சகாய விலையில் மருந்துகளை பெறும் வகையில் மத்திய அரசின் திட்டத்தை பயன்படுத்தி, பிரதம மந்திரி “மக்கள் மருந்தகம் “ எனும் ஜெனிரிக் மருந்து கடையை இன்ஷா அல்லாஹ் விரைவில் காயல் பட்டணத்தில் திறக்க உள்ளோம்.
மக்கள் மருந்தக கடையில் (Generic Medical Store) பணிபுரிய D.Pharm / B.Pharm பட்டதாரி (ஆண் / பெண்) தேவைப்படுகிறது.
விருப்பமுள்ள தகுதியுடையோர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலதிக விபரத்திற்கு ஷிஃபா அலுவலத்தை தொடர்பு கொள்ளவும்.
அலுவலக முகவரி:
ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்ட்,
6 – சதுக்கைத் தெரு,
காயல்பட்டணம். 628 204.
மின்னஞ்சல் : kayalshifa@gmail.com
தொலைபேசி : 04639 281212 & 97902 81252.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
‘கண்டி’ ஸிராஜ்
(நிர்வாகி - ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் ட்ரஸ்ட்) |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|