| |
செய்தி எண் (ID #) 18663 | | | வெள்ளி, ஐனவரி 13, 2017 | சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஏற்பாட்டில் கடையநல்லூரில் நடைபெற்ற தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாமில், காயலர் நிறுவனமும் பங்கேற்பு! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 2468 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
கடையநல்லூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாமில், காயல்பட்டினத்தைச் சேர்ந்தோரின் நிறுவனமும் பங்கேற்றுள்ளது. விரிவான விபரம்:-
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஏற்பாட்டில், கடையநல்லூர் மசூது தைக்கா மேனிலைப் பள்ளி வளாகத்தில், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம், 07.01.2017. சனிக்கிழமையன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
சுமார் 32 தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்றன. காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் தங்க ஆபரணத் தொழிற்சாலை நிறுவனமும் அவற்றுள் அடக்கம்.
இம்முகாமில், வேலைவாய்ப்புகளைத் தேடி 2500க்கும் மேற்பட்ட இளைஞரும், யுவதியரும் பங்கேற்றனர். நிறைவில், சுமார் 750 பேருக்கு முகாமிலேயே வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் பலரது விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|