ஜனவரி 18, 2017 புதனன்று நகரில் ஹெல்மெட் பேரணி! 2 சக்கர வாகனங்கள் ஓட்டுநர்களும், பொது மக்களும் கலந்துக்கொள்ள நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
இறைவன் நாடினால், எதிர்வரும் புதனன்று (ஜனவரி 18, 2017) - சாலை போக்குவரத்து வாரத்தை (ROAD SAFETY WEEK) முன்னிட்டு, ஹெல்மெட் அணிந்த - இரு சக்கர வாகன ஓட்டுநர் பேரணி நடைபெற உள்ளது.
நகரில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளை ஒழித்திடும் முகமாக நடத்தப்படவுள்ள இந்நிகழ்வில், நகரின் -
--- 18 வயதை தாண்டிய
--- 2 சக்கர வாகன உரிமையாளர்களை
--- தலையில் ஹெல்மெட் அணிந்து
- இப்பேரணியில் கலந்துக்கொள்ள - நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் அன்புடன் அழைக்கிறது.
மேலும் - இந்நிகழ்ச்சி, பயனான வகையில் நடந்திட - பொது மக்களும் திரளாக கலந்துக்கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
இந்நிகழ்ச்சி - இறைவன் நாடினால் - ஜனவரி 18 புதனன்று, மதியம் 2:30 முதல் மாலை 4:30 வரை நடைபெறும். இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள விரும்பும், ஹெல்மெட் வைத்துள்ள, 18 வயதை தாண்டிய, 2 சக்கர வாகன உரிமையாளர்களை ஒருங்கிணைக்க {ஹெல்மெட் பேரணி} 18-1-2017 என்ற தற்காலிக WHATSAPP குழுமம் துவக்கப்பட்டுள்ளது. அக்குழுமத்தில் தாங்கள் - கீழே உள்ள இணைப்பு மூலமாக இணைந்துக்கொள்ளலாம்.
https://chat.whatsapp.com/Afbc55dAk82EnRnx3yyNhO
அல்லது, தங்கள் விருப்பத்தை +91 7397 468 321 என்ற எண்ணுக்கு தெரிவித்தால் தங்கள் எண், தற்காலிக குழுமத்தில் இணைக்கப்படும்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|