வடகிழக்குப் பருவமழை பொய்த்துள்ளதையடுத்து, தமிழகத்தின் அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. பாபநாசம் அணையிலும் தண்ணீர் குறைந்துவிட்டதால், அங்கிருந்து வினியோகிக்கப்படும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காயல்பட்டினம் உட்பட பெரும்பாலும் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலை பெறுகிறது.
இந்நிலையில், பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக – காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், லாரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. சித்தன் தெருவில் இன்று லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்ட காட்சி:-
|