இம்மாதம் 14, 15, 16 தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, காயல்பட்டினம் கடற்கரையில் நேற்றும், இன்றும் (ஜனவரி 15, 16) மாலையில் பெரும் மக்கள் திரள் காணப்பட்டது. காயல்பட்டினம் புறநகர் பகுதிகளிலிருந்தும், சுற்றுவட்டார ஊர்களிலிருந்தும் ஏராளமான ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் கடற்கரையில் திரண்டனர்.
மக்கள் திரளை எதிர்பார்த்து, தின்பண்டங்கள், விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்காக வணிகர்களும் ஏராளமாக கடை விரித்திருந்தனர்.
இம்மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, ஆறுமுகநேரி காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாற்சக்கர வாகனங்களை அவர்கள் சொளுக்கார் தெரு, கொச்சியார் தெரு ஆகிய தெருக்களில் நிறுத்தச் செய்தனர்.
பெரும் மக்கள் திரளுக்கிடையில், சிறுவர்கள் ஆங்காங்கே பட்டங்களைப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தனர்.
அவற்றுள் சில நூல் அறுந்ததில், மணலில் அமர்ந்திருந்த பொதுமக்களைப் பதம் பார்க்கத் துவங்கியது. இதுகுறித்து, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் பல பட்டங்களின் நூல்களை அறுத்தும், பலருக்கு எச்சரிக்கை கொடுத்தும், பட்டங்கள் பறக்க தடை விதித்தனர்.
|