காயல்பட்டினம் நகர இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்லவர்களை ஒருங்கிணைக்கவும் - ஊக்குவிக்கவும் “இலக்கிய முற்றம்” எனும் பெயரில் புதிய அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் ஏ.எல்.முஹம்மத் நிஜார் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினத்தைச் சேர்ந்த இலக்கிய வாதிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் , 29 -12 -2016 வியாழன் இரவு 7 மணி அளவில் காயல்பட்டினம் குறுக்குச் சாலையில் உள்ள PHM சிற்றுண்டி விடுதியில் அல்ஹாஜ் சொளுக்கு S.S.M. செய்யது அஹ்மது B.A., அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
அல்ஹாபிழ் S.H. பாதுல் அஸ்ஹாப் ஆலிம் பாஸி அவர்கள் திருமறை வசனங்களை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார் .
அல்ஹாஜ் A.L. முஹம்மது நிஜார் அவர்கள் வரவவேற்புரையாற்றினார் . ஜனாப் காயல் S.E. அமானுல்லாஹ் அவர்கள் கூட்டத்தின் நோக்கம் பற்றிய அறிமுக உரையாற்றினார் .
கூட்டத்தின் தலைவர் அல்ஹாஜ் சொளுக்கு S.S.M. செய்யது அஹ்மது B.A., அல்ஹாபிழ் S.H. பாதுல் அஸ்ஹப் ஆலிம் பாஸி , அல்ஹாஜ் S.H. பாக்கர் சாஹிப் B.Sc., அல்ஹாஜ் A.R. தாஹா , ஜனாப் அன்பின் அலாவுதீன் , ஜனாப் J. முஹம்மது லரீப் , ஜனாப் M.O.S. அன்சாரி , ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.
கலந்துரையாடல் மற்றும் கருத்து பரிமாற்றங்களுக்கு பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 . காயல்பட்டினத்தைச் சார்ந்த இலக்கிய வாதிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களைக் கொண்டு ஓர் இலக்கிய அமைப்பை உருவாக்கி நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
2 . காயல் இலக்கிய முற்றம் எனும் பெயரில் அவ்விலக்கிய அமைப்பை உருவாக்கி அதை சிறப்புடன் இயக்குவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
3 . தமிழ்கூறும் நல்லுலகில் சிகரங்களைத் தொட்ட, வாழ்ந்து சிறந்த மற்றும் வாழும் இலக்கிய வாதிகளின் பொதுவான மற்றும் மார்க்க சார்ந்த படைப்புக்களை மக்களிடையே மேலும் பரவசச் செய்யும் நடவடிக்கைகளை வாய்ப்புள்ள வழிகளின் மூலம் மேற்கொள்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
4. வெளி உலகிற்கு அடையாளம் தெரியாமல் வாழும் இலக்கியவாதிகளின் படைப்பாற்றலை கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து, அவர்களின் ஆக்கங்களையும் அறிமுகப் படுத்தும் நடவடிக்கைகளை வாய்ப்புள்ள வழிகளின் மூலம் மேற்கொளவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது .
5. மேலும், முக்கியத்துவம் வாய்ந்த ஆவணப்படுத்தப்பட்டுள்ள வரலாறுகளை வாய்ப்புள்ள வழிகளின் மூலம் மீள்பதிப்பு செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும், குறிப்பாக இதுவரை கிடைத்துள்ள தகவலோடு மேலும் கிடைக்கும் தரவுகளையும் இணைத்து காயல்பட்டினம் பற்றிய புதிய வரலாற்று நூலை வெளியிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
6.காயல்பட்டினம் மற்றும் வரலாற்றில் வாழும் ஊர்களின் பழம் பெருமையை வெளிப்படுத்தும் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்திடவும் , இலக்கிய மற்றும் வரலாற்று நூற்களை கொண்ட நூலகத்தை உருவாக்கிடவும் முயற்சிகளை மேற்கொள்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது .
7. காயல் இலக்கிய முற்றம் அமைப்பிற்கு துவக்கமாக கீழ்கண்ட தற்காலிக நிர்வாகக் குழுவை அமைப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது
தலைவர்: அல்ஹாஜ் S.H. பாக்கர் சாஹிப் B.Sc.,
துணைத்தலைவர்: அல்ஹாஜ் சொளுக்கு S.S.M. செய்யது அஹ்மது B.A.,
செயலாளர்: அல்ஹாஜ் A.L. முஹம்மது நிஜார்,
துணைச்செயலாளர்: அல்ஹாஜ் A.R. தாஹா ,
பொருளாளர்: ஜனாப் K.M.S. செய்யது இஸ்மாயில் ,
செயற்குழு உறுப்பினர்கள்
அல்ஹாபிழ் S.H. பாதுல் அஸ்ஹாப் ஆலிம்,
அல்ஹாபிழ் T.S.A. அபுதாஹிர் ஆலிம் ,
கவிஞர் S.A. நெய்னா,
ஜனாப் காயல் S.E. அமானுல்லாஹ் ,
அல்ஹாபிழ் N.T. சதக்கத்துல்லாஹ் ,
ஜனாப் கவிமகன் M.S. அப்துல் காதிர் ,
அல்ஹாஜ் கவிஞர் A.R. ரிபாய் சுல்தான் ,
ஜனாப் M .O .S . அன்சாரி,
அல்ஹாபிழ் M.A.K. அபுதாஹிர்
அல்ஹாபிழ் B.S. அஹமது ஸாலிஹ்
ஜனாப் M.I. மஹ்மூது தீபி ,
அல்ஹாஜ் P.N.N. ஜெய்னுல் ஆபிதீன் ,
ஜனாப் M.B. சேகு அப்துல் காதிர் ,
ஜனாப் M.M. ஷாஹுல் ஹமீது
8.காயல்பட்டினத்தைச் சேர்ந்த இலக்கிய வாதிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை கண்டறிந்து இவ்வமைப்பின் அங்கங்களாக அவர்களை இணைப்பது , அமைப்பிற்கான விதிமுறைகளை உருவாக்கி அமைப்பை பதிவு செய்வது , அமைப்பிற்கான அலுவலகத்தை திறப்பது, அவசியமான நேரங்களில் ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்வது மற்றும் பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள தற்காலிக நிர்வாக குழுவிற்கு அனுமதி அளித்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
9. காயல் இலக்கிய முற்றம் எனும் பெயரில் வாட்சப் குழுமம் ஒன்றை உருவாக்கி இவ்வமைப்பின் அங்கங்களையும், இந்த அமைப்பில் இடம்பெறாத உள்ளூர் மற்றும் வெளியூரைச் சார்ந்த இலக்கிய வாதிகளை மற்றும் இலக்கிய ஆர்வர்களை அதில் இணைத்து இயக்குவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
10.வாழும் தலைமுறைக்கு பயனுள்ளதாக , வருங்கால தலைமுறைக்கு சிறந்த அர்பணிப்பாக விளங்கும் விதத்தில் இந்த அமைப்பை ஒற்றுமையுடன் இயக்கி , இலக்கியச் சேவையாற்றி, நமது அன்னையூராம் காயலுக்கு பெருமை சேர்ப்பதென இக்கூட்டம் உறுதியேற்று தீர்மானிக்கிறது.
11. தூய்மையான எண்ணுத்துடன் துவக்கம் கண்டுள்ள இவ்வியக்கம் சாதனைகளை குவிக்க வல்லோனாம் அல்லாஹ்வை உள்ளார இக்கூட்டம் வேண்டுகிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் இலக்கிய ஆர்வலர்களான கவிஞர் S.A. நெய்னா , கவிஞர் அல்ஹாஜ் A.R. தாஹா , ஜனாப் காயல் S.E. அமானுல்லாஹ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.
அல்ஹாஜ் கவிஞர் S.A.K. முஹைதீன் அப்துல் காதிர் அவர்கள் அமைக்கப்பட்டுள்ள இலக்கிய முற்றம் குறித்து வாழ்த்து பாடல் இசைத்தார்
இக்கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்ட 23 நபர்களில் 19 பேர் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இக்கூட்டத்திற்கு அபுதாபியில் பணிபுரியும் காயலர் ஜனாப் M.O.S. அன்சாரி அனுசரணையாளராக திகழ்ந்தார்.
நன்றி நவிலல் மற்றும் துஆவுடன் இக்கூட்டம் நிறைவு பெற்ற பின் , இரவு விருந்து இடம் பெற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.L.முஹம்மத் நிஜார் |