எல்.கே.மேனிலைப்பள்ளி பயின்றோர் பேரவை சார்பில், நடத்தப்பட்ட முன்னாள் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில், பிரிவு (Batch) வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரிவான விபரம்:-
காயல்பட்டினம் எல்.கே. மேனிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து இயங்கும் பயின்றோர் பேரவை சார்பில், முன்னாள் மாணவர் ஒன்றுகூடல் சிறப்பு நிகழ்ச்சி, 31.12.2016. சனிக்கிழமையன்று 10:30 மணியளவில், பள்ளி வளாகத்தில், டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமையில் நடைபெற்றது.
எம்.ஏ.காழி அலாவுத்தீன் (டீ.ஏ.எஸ்.) நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். கிராஅத்தைத் தொடர்ந்து, பயின்றோர் பேரவை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.என்.அஹ்மத் மீராத்தம்பி வரவேற்புரையாற்றினார்.
கூட்டத் தலைவரின் தலைமையுரையைத் தொடர்ந்து, பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் எம்.ஏ.புகாரீ - கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்து, அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து நடைபெற்ற கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியில், ‘துணி’ அன்ஸாரீ, ஏ.எல்.முஹம்மத் நிஜார், எல்.கே.கே.லெப்பைத் தம்பி, உமர் குவைலித், எஸ்.ஐ.புகாரீ, எம்.எல்.ஃபிர்தவ்ஸ், டீ.ஏ.எஸ்.மீரா ஸாஹிப், செய்யித் இப்றாஹீம், மிஸ்கீன் ஸாஹிப், ‘துணி’ முஹம்மத் உமர், சந்திரசேகர், எம்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.
>>> உலகெங்கும் பல்கிப் பரவி வாழும் - திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரி மாணவர்கள் அவரவர் வசிப்பிடங்களில் முன்னாள் மாணவர் அமைப்பை சிறப்புற நடத்துவதைப் போல, இவ்வமைப்பை நடத்த வேண்டும்...
>>> படித்தோம், சென்றோம் என்றில்லாமல் - முன்னாள் மாணவர்களாகிய நமக்கு வாழ்வளித்த இப்பள்ளியின் மூலம் நாம் பலருக்கு வாழ்வளிக்க முன்வர வேண்டும்...
>>> கல்வியில் திறமையுள்ளோருக்கு மட்டுமின்றி, விளையாட்டுத் துறையில் திறமையுள்ளோருக்கும் வழிகாட்டி வாழ்வளித்துள்ளது இப்பள்ளிக்கூடம்...
>>> நீதி போதனைகள் அறவே நீர்த்துப் போய்விட்ட இக்காலகட்டத்தில், மாணவ சமுதாயம் மேம்பட வேண்டுமானால், மீண்டும் நீதி போதனை பாட வேளை உருவாக்கப்பட வேண்டும்... அதற்காக அரசிடம் வலுவாகக் கோரிக்கை வைக்க வேண்டும்...
>>> அனைத்து முன்னாள் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் வருடத்தில் ஒரு நாளை “பள்ளியின் முன்னாள் மாணவர் நாள்” என நிர்ணயித்து, எக்காலமும் அதே நாளில் ஒன்றுகூடலை நடத்திட முயற்சிக்க வேண்டும்...
>>> ஆன்ட்ராய்ட் கைபேசி வழியே மாணவர்களை இலகுவாக ஒருங்கிணைக்க சிறப்பு செயலி (Application) உருவாக்கப்பட வேண்டும்...
உள்ளிட்ட ஆலோசனைகளுடன், தாம் பயின்ற காலத்து நிகழ்வுகளையும் நினைவுகூர்வதாக அவர்களின் உரைகள் அமைந்திருந்தன.
நிறைவில், பள்ளியின் அனைத்து முன்னாள் மாணவர்களையும் ஒருங்கிணைப்பதற்காக, பிரிவு (Batch) வாரியாக பொறுப்பாளர்கள் பின்வருமாறு நியமிக்கப்பட்டனர்:-
(01) 1947 - டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்
(02) 1965 – ‘துணி’ முஹம்மத் உமர்
(03) 1976 - எஸ்.ஐ.புகாரீ
(04) 1977 - கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் (Facebook)
(05) 2008 - ஷேக்னா லெப்பை
(06) 1989 – ‘துணி’ அன்ஸாரீ
(07) 1987 - ஏ.எல்.முஹம்மத் நிஜார்
(08) 1994 - எஸ்.கே.ஸாலிஹ், எம்.எல்.ஃபிர்தவ்ஸ்
(09) 1992 - செய்யித் இப்றாஹீம், எம்.பி.எஸ்.செய்யித் அஹ்மத்
(10) 2009 - நளீம்
(11) 2001 - ஜியாத்
(12) 1996 – எம்.ஏ.காழி அலாவுத்தீன் (டீ.ஏ.எஸ்.)
(13) 1997 - மீராத்தம்பி
(14) 1995 - செய்யித் ஹஸன்
(15) 2006 - மிஸ்கீன் ஸாஹிப்
(16) 2003 - ஜமால்
நன்றியுரையைத் தொடர்ந்து, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
|