நீதிமன்றத்தின் இடைக்கால ஆணையை தொடர்ந்து காயல்பட்டினம் நகராட்சியில் இருந்து, சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த இரண்டாவது முறையாக தனி அலுவலரிடம் மனு நேற்று (ஜனவரி 13) வழங்கப்பட்டது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் நகராட்சியில் இருந்து சீமை கருவேல மரங்களை வேரோடு அப்புறப்படுத்த இரண்டாவது முறையாக தனி அலுவலரிடம் மனு நேற்று (ஜனவரி 13) - நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் சார்பாக, இரண்டாவது முறையாக வழங்கப்பட்டது. இது குறித்த முதல் மனு - டிசம்பர் 28 அன்று நகராட்சியிடம் வழங்கப்பட்டது.
சீமை கருவேல மரங்களை வேரோடு காயல்பட்டினம் நகராட்சியில் இருந்து அப்புறப்படுத்த - இரண்டாவது முறையாக - தனி அலுவலரிடம் வழங்கப்பட்ட மனு!
காயல்பட்டினம் நகராட்சி தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது மிகப்பெரிய ஊராகும். 4000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு கொண்ட இவ்வூரில், பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் நிறைந்துகாணப்படுகின்றன.
சீமை கருவேல மரங்கள் (PROSOPIS JULIFLORA) - நிலத்தடி நீர்மட்டத்தை குறைக்கிறது என்றும், சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்றும் பல்வேறு வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
WP (MD) 16485 of 2015 என்ற எண் கொண்ட வழக்கில் - டிசம்பர் 20 அன்று இடைக்கால தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, தமிழகத்தின் 13 மாவட்டங்களின் தலைநகர்களில் இம்மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு முதல் கட்ட உத்தரவே என்றும்,. இந்த மரங்களால் - மாவட்ட தலைநகர்கள் மட்டுமல்ல, மாநிலத்தின் இதர பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதால் - நீதிமன்றம், தனது அடுத்த அமர்வுகளில், இந்த ஆணையை மாநிலத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவாக்கும் என்றும் தங்களுக்கு டிசம்பர் 28 தேதியை மனு வாயிலாக, நடப்பது என்ன? குழுமம் தெரிவித்திருந்தது.
ஜனவரி 10 அன்று நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணையில் - 13 மாவட்டங்கள் முழுவதும், இம்மரங்களை வேரோடு அகற்றிட கூறியுள்ளது. எனவே - இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பொய்த்துள்ளதால் உருவாக வாய்ப்புள்ள நிலத்து நீர் மட்ட பிரச்சனையை கருத்தில் கொண்டும், சுற்றுச்சூழலை பாதுகாப்பது நகராட்சியின் இன்றியமையாத கடைமைகளில் ஒன்று என்பதனை கருத்தில் கொண்டும், நீதிமன்ற ஆணையை கருத்தில் கொண்டும், உடனடியாக, தனியார், அரசு என்று எந்த பாகுபாடும் பார்க்காமல் நகரின் அனைத்து நிலங்களிலும் உள்ள சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
ஜனவரி 10, 2017 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய இடைக்கால தீர்ப்பு!
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |