மகளிர் காவல் நிலையம் சார்பில் – மகளிருக்கான சட்டங்கள் பற்றிய கருத்தாய்வுக் கூட்டம்! “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும ஒருங்கிணைப்பில், கடற்கரையில் இன்று மாலை நடைபெறுகிறது!!
திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் சார்பில் – மகளிருக்கான சட்டங்கள் பற்றிய கருத்தாய்வுக் கூட்டம், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும ஒருங்கிணைப்பில், காயல்பட்டினம் கடற்கரையில் இன்று மாலை நடைபெறுகிறது.
இந்நவீன உலகில் மகளிர் சமூகத்தினர் சந்திக்கும் பிரச்சினைகளையும், அவற்றுக்குத் தம் பணியனுபவ அடிப்படையிலான தீர்வுகளையும் விளக்கிடும் நோக்கில் காவல்துறை கேட்டுக்கொண்டதற்கிணங்க, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறது. திருச்செந்தூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி இதில் கலந்துகொண்டு, மகளிர் பாதுகாப்பு குறித்த கருத்துப் பரிமாற்றத்தை வழிநடத்தவுள்ளார். இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross