காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீ/பின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 28.03.2017. செவ்வாய்க்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ஏப்ரல் 22 அன்று ரஜப் 24ஆம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, சீர்காழி – புத்தூர் மஸ்ஜிதுத் தக்வா இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எல்.ஹாமிதுல்லாஹ் ஃபாஸீ, இராணிப்பேட்டை காவா மஸ்ஜித் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல்லாஹ் முஹம்மத் லெப்பை மிஸ்பாஹீ ஆகியோர் வழங்கினர்.
ரஜப் 25ஆம் நாள் (ஏப்ரல் 23) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஹாஃபிழ் எச்.பி.என்.ஷாஹ் ஸாத் அல்புகாரீ, தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவரும் – சென்னை ஃகைருல் பரிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலீ ஆகியோர் வழங்குகின்றனர்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|